கருணாநிதி வீடு திரும்பினார்

Asianet News Tamil  
Published : Dec 08, 2016, 09:13 AM ISTUpdated : Sep 19, 2018, 02:37 AM IST
கருணாநிதி வீடு திரும்பினார்

சுருக்கம்

கடந்த சில நாட்களுக்கு முன் திமுக தலைவர் கருணாநிதிக்கு, உடல் முழுவதும் கொப்புளம் ஏற்பட்டு, உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவருக்கு வீட்டிலேயே டாக்டர்களை கொண்டு சிகிச்சை அளித்தனர்.

அப்போது, நொய் தொற்று ஏற்படும் என கூறிய டாக்டர்கள், அவரை யாரும் சந்திக்க வேண்டாம், என அறிவுறுத்தினர். அதேபோல், திமுக தலைவர் தொண்டர்களுக்கு, கருணாநிதியை யாரும் சந்திக்க வேண்டாம் என கூறியது.

இந்நிலையில் கடந்த 1ம் தேதி கருணாநிதிக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. உடனடியாக அவரை சென்னையில் உள்ள கவேரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இதையறிந்ததும், திமுக தொண்டர்கள் கடும் அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து பொதுமக்களும், திமுக தொண்டர்களும் மருத்துவமனையை முற்றுகையிட்டனர். அவரை யாரும் சந்திக்க வேண்டாம் என மீண்டும் டாக்டர்கள் அறிவுறுத்தினர்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட திமுக தலைவர் கருணாநிதியை, அவரது மகள் கனிமொழி எம்பி, மனைவி தயாளு அம்மாள், துணைவியார் ராஜாத்தி அம்மாள் ஆகியோர் கவனித்து வந்தனர்.

இந்நிலையில் கருணாநிதியின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதை தொடர்ந்து நேற்று இரவு அவர் வீடு திரும்பினார்.

PREV
click me!

Recommended Stories

2026ஆம் ஆண்டு தேர்தலில் தமிழகத்தில் பெரும் மாற்றம் இருக்கும் - பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
விஜய் பக்கம் சாய்ந்த அதிமுக சீனியர்! தவெக-வில் இணைந்த எம்ஜிஆர் காலத்து விசுவாசி ஜே.சி.டி. பிரபாகர்