பன்னீர், பழனிசாமி பற்றிய வெச்சு செய்யப்பட்ட அந்த பகீர் வீடியோ: தெனாவெட்டாய் பரப்பிய டி.டி.வி.  ஆதரவாளர்...

 
Published : Dec 13, 2017, 06:35 PM ISTUpdated : Sep 19, 2018, 01:40 AM IST
பன்னீர், பழனிசாமி பற்றிய வெச்சு செய்யப்பட்ட அந்த பகீர் வீடியோ: தெனாவெட்டாய் பரப்பிய டி.டி.வி.  ஆதரவாளர்...

சுருக்கம்

ttv supporter released video regards OPS and EPS

தர்மயுத்தம் நடத்தி அழுதுபிடிச்சு தமிழ்நாட்டுக்கு துணைமுதல்வராயிட்டாலுங்கூட, தினகரனின் சொந்த மாவட்டமான தேனி மாவட்டத்துல இன்னமும் பன்னீர்செல்வத்தை ‘கைப்புள்ள’ ரேஞ்சுக்குதான் ட்ரீட் செய்கிறார்கள் அவரது ஆதரவாளர்கள். வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் அவரை கிண்டலடித்து, எச்சரித்து, மிரட்டி, நக்கல் நய்யாண்டி செய்து கொண்டிருந்தது. இப்போது ஒரு படி மேலே போய்விட அதிர்ச்சியில் உறைந்து நிற்கிறார் பன்னீர்செல்வம். 

அதாவது தினகரனின் கடும் ஆதரவாளராக தேனி மாவட்டத்தில் செயல்படுபவர் கர்ணன். இவர் தனது காரில் அமர்ந்தபடி, பின்னணியில் ஆதரவு கைகள் சிலர் புடைசூழ இருக்க, ஒரு வீடியோவை பேசி அதை சமூக வலைதளத்தில் ஷேர் செய்திருக்கிறார். 
எழுதவும், பகிரவும் கூசக்கூடிய பகீர் வார்த்தைகளை கொட்டி தள்ளியிருக்கிறார்.

கர்ணன்...’மக்களே ஓ.பி.எஸ். செ....போயிட்டாரு. நாளைக்கு அவர் ஊரான பெரியகுளத்துல இறுதி... அதனால இதை சந்தோஷமா கொண்டாடுங்க. இந்த லைவ் வீடியோவை எல்லாரும் ஷேர் பண்ணுங்க.”என்று மீண்டும் மீண்டும் சொல்கிறார். பக்கத்தில் உள்ள நபர் ஏதோ கேட்க....”ஆமா பன்னீரு செ...போனதால தேனி மாவட்டத்துல பள்ளிக்கூடம், அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை” என்பவர் அதன் பின் பன்னீரை பற்றி கேட்க கூசுமளவுக்கு ஒரு வார்த்தையை உபயோகப்படுத்துகிறார். 

அத்தோடா நிறுத்துகிறார் “ஏதோ நம்ம கட்சியில அவ.. கொஞ்சநாளா இருந்ததாலே அவ...ஒரு பத்துரூபாய கட்டி விட்டுடுவோம்.” என்பவர் அடுத்த நொடியே “அவனுக்கு இறுதி  மரியாதை செலுத்த வருகை தரும் எடப்பாடி...” என்று ஆரம்பித்து முதல்வரையும் காது கூசும் வார்த்தைகளில் வறுத்தெடுக்கிறார்.  

முழுக்க முழுக்க தெளிவாக, இந்த வீடியோ தமிழகமெங்கும் வைரலாக ஷேர் ஆக வேண்டும் என்கிற அடிப்படையில் மிக தெளிவாக இரு முதல்வர்களையும் மட்டமான வார்த்தைகளில் திட்டியிருக்கும் கர்ணனை கைது செய்திருக்கிறது தேனி போலீஸ்.
எடப்பாடி - பன்னீர் மற்றும் தினகரன் அணிகளுக்கு இடையில் நடக்கும் யுத்தத்தில் இது மிக உச்சநிலை மட்டுமல்ல அக்கழகத்துக்கு இழிநிலையும் கூட.

PREV
click me!

Recommended Stories

தவெக கூட்டத்தில் உணவு கிடையாது.. தண்ணீர் பாட்டில் மட்டும்தான்.. செங்கோட்டையன் விளக்கம்
தொடர் விடுமுறை.. சொந்த ஊர் போறீங்களா?.. போக்குவரத்துக்கழகம் சொன்ன குட்நியூஸ்..!