உன் குடும்பத்தையும் கொல்வேன் ; போலீஸ் குடும்பத்தையும் கொல்வேன் - தப்பிச்சென்ற கொள்ளையன் மிரட்டல்...! 

 
Published : Dec 13, 2017, 06:28 PM ISTUpdated : Sep 19, 2018, 01:40 AM IST
உன் குடும்பத்தையும் கொல்வேன் ; போலீஸ் குடும்பத்தையும் கொல்வேன் - தப்பிச்சென்ற கொள்ளையன் மிரட்டல்...! 

சுருக்கம்

Chennai Maduravayal Inspector shot dead a big pond and escaped the thieves of Nanduram jewelery owner.

சென்னை மதுரவாயல் இன்ஸ்பெக்டர் பெரிய பாண்டியை சுட்டுக்கொன்று விட்டு தப்பியோடிய கொள்ளையன் நாதுராம் நகைக்கடை உரிமையாளருக்கு மிரட்டல் விடுத்துள்ளான். 

கடந்த மாதம்தான் சென்னை மதுரவாயல் காவல் ஆய்வாளராக பெரிய பாண்டி என்பவர் பொறுப்பேற்றார். 

இதையடுத்து கொளத்தூரில் கடந்த மாதம் நடந்த நகைக்கடை கொள்ளை தொடர்பாக திருடர்களை பிடிக்க பெரிய பாண்டி தலைமையில் 6 பேர் கொண்ட குழு ராஜஸ்தான் புறப்பட்டு சென்றது. 

இந்நிலையில், கொள்ளையர்களை பிடிக்க முயன்ற போது சென்னை மதுரவாயல் சட்டம் ஒழுங்கு காவல் ஆய்வாளர் பெரியபாண்டியை ராஜஸ்தானில் கொள்ளையன் நாதுராம் சுட்டுக்கொன்று விட்டு தப்பி சென்றான். 

இதைதொடர்ந்து கொள்ளையனை பிடிக்க தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். 

இந்நிலையில், இன்ஸ்பெக்டர் பெரிய பாண்டியை சுட்டுக்கொன்று விட்டு தப்பியோடிய கொள்ளையன் நாதுராம் நகைக்கடை உரிமையாளருக்கு மிரட்டல் விடுத்துள்ளான். 

அதாவது தங்கள் கூட்டாளிகளை விடுவிக்க வேண்டும் எனவும் இல்லையென்றால் உன் குடும்பத்தையும் போலீசாரின் குடும்பத்தையும் கொல்வேன் என நகைக்கடைக்காரரை மிரட்டியுள்ளான். 

இதையடுத்து செல்போன் பேசியதையடுத்து நாதுராம் இருக்கும் இடத்தை கண்டுபிடித்தது போலீஸ். மேலும் மீண்டும் ராஜஸ்தான் பறந்தது தமிழக போலீஸ். 

PREV
click me!

Recommended Stories

LED பல்ப் முறைகேட்டில் வேலுமணியை இறுக்கும் ED.. அதிக தொகுதிகளை பறிக்க பாஜக ஸ்கெட்ச்..?
இன்ஸ்பெக்டர் வீட்டில் குளித்த கல்லூரி மாணவி.. வளைச்சு வளைச்சு வீடியோ எடுத்த போலீஸ்காரர்.. இறுதியில் நடந்த ட்விஸ்ட்