
டெல்டா விவசாயிகள் பாதிப்பு
காவிரியில இருந்து தண்ணீர் திறந்துவிடப்படாத காரணத்தால் தமிழகத்தில் விவசாய நிலங்கள் பாதிக்கப்படும் நிலை உருவாகியுள்ளது. இதனையடுத்து டெல்டா மாவட்டங்களில் குறுவை பயிர் சாகுபடி பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, பயிர் பாதிப்பு விவரங்கள் முறையாக கணக்கிடப்பட்டு, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு ரூ.13,500 இழப்பீடாக வழங்கப்படும் என அறிவித்துள்ளார். இதனிடையே இழப்பீடு போதாது என விவசாயிகள் மற்றும் எதிர்கட்சிகள் தெரிவித்துள்ளன. இது தொடர்பாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
35 ஆயிரம் இழப்பீடு வழங்கனும்
கடைமடை வரை செல்லும் அளவிற்கு தண்ணீர் உள்ளதா என்பதை யோசிக்காமல் மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டதும், காவிரியில் இருந்து உரிய நீர் பெற முயற்சி மேற்கொள்ளாததும் விவசாயிகள் மீது முதலமைச்சர் ஸ்டாலினுக்கு அக்கறை இல்லாததை காட்டுவதாக விமர்சித்துள்ளார். காவிரி நீரை நம்பி, ஏக்கருக்கு 25 ஆயிரம் வரை செலவு செய்து குறுவை சாகுபடி செய்த விவசாயிகளுக்கு, ஹெக்டேர் ஒன்றுக்கு 13, 500 ரூபாய் இழப்பீடாக வழங்கப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்திப்பது , பயிரை இழந்து தவிக்கும் விவசாயிகளுக்கு வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல் உள்ளதாக தெரிவித்துள்ள அவர், பாதிக்கப்ப்ட்டுள்ள விவசாயிகளுக்கு ஏக்கர் ஒன்றுக்கு 35 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் என டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.
இதையும் படியுங்கள்
விவசாயிகளுக்கு ஹெக்டேருக்கு ரூ.13,000 இழப்பீடு: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு!