போராட்டத்தில் ஈடுபடும் மாற்றுத் திறனாளிகளை வலுக்கட்டாயமாக கைது செய்வதா? தினகரன் கடும் கண்டனம்

By Velmurugan s  |  First Published Feb 15, 2024, 12:41 PM IST

அரசுப் பணிகளில் இட ஒதுக்கீடு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மாற்றுத்திறனாளிகளை வலுக்கட்டாயமாக கைது செய்திருக்கும் காவல்துறையின் நடவடிக்கை கடும் கண்டனத்திற்குரியது என அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.


அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சிபெற்றவர்களுக்கு நியமனத் தேர்விலிருந்து விலக்கு, TNPSC மூலம் பார்வை மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்புத் தேர்வு, ஊக்கத் தொகையை ரூ.5000 ஆக உயர்த்த வேண்டும் உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பார்வை மாற்றுத்திறனாளிகள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

சென்னையின் பல்வேறு இடங்களில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பார்வை மாற்றுத்திறனாளிகளை பேச்சுவார்த்தைக்கு அழைக்காமல், காவல்துறை மூலம் அவர்களை வலுக்கட்டாயமாக கைது செய்வது தமிழக அரசின் அதிகாரப்போக்கையை வெளிப்படுத்துகிறது.

Latest Videos

undefined

பழைய இரும்பு கடையில் மாமூல் கேட்டு கடைக்காரர் மீது கொலைவெறி தாக்குதல்; வீடியோ வெளியாகி பரபரப்பு

எதிர்க்கட்சித் தலைவராக இருந்த போது தங்களின் போராட்டங்களுக்கு நேரில் வந்து ஆதரவு தெரிவித்த திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள், முதலமைச்சராக பொறுப்பேற்ற பின் தங்களை சந்திக்க கூட மறுப்பது ஏன் ? என பார்வை மாற்றுத்திறனாளிகள் கேள்வி எழுப்புகின்றனர்.

இந்துக்களின் விரோதியான திமுக மட்டுமே எங்கள் அரசியல் எதிரி - பாஜக பொதுச்செயலாளர் அதிரடி பேச்சு

எனவே, தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பார்வை மாற்றுத்திறனாளிகளை அழைத்துப் பேசி அவர்களின் நியாயமான கோரிக்கைகள உடனடியாக நிறைவேற்றுவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களை கேட்டுக் கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

click me!