வீடியோவில் சிக்கிய ஐயப்பன் ராமசாமி... மூஞ்சி முகரைய உடைப்பேன் என டிடிஎப் வாசன் ஆவேசம்!!

Published : Mar 17, 2023, 10:12 PM IST
வீடியோவில் சிக்கிய ஐயப்பன் ராமசாமி... மூஞ்சி முகரைய உடைப்பேன் என டிடிஎப் வாசன் ஆவேசம்!!

சுருக்கம்

நெறியாளர் ஐயப்பன் ராமசாமியின் பெண்கள் குறித்தான பேச்சுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் டிடிஎப் வாசன் வெளியிட்டிள்ள வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. 

நெறியாளர் ஐயப்பன் ராமசாமியின் பெண்கள் குறித்தான பேச்சுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் டிடிஎப் வாசன் வெளியிட்டிள்ள வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. கோவை சேர்ந்த டிடிஎப் வாசன் என்பவர் Twin Throttlers என்ற யூடியூப் சேனல் நடத்தி வருகிறார். இவர் தனது விலையுயர்ந்த பைக்கில் வேகமாக சென்று அதை வீடியோவாக வெளியிட்டு இளைஞர்கள் மத்தியில் பிரபலமானார். இந்த நிலையில் இவர் கடந்த ஆண்டு ஜூலை மாதம் தனது பிறந்தநாளை முன்னிட்டு ரசிகர்கள் சந்திப்பு நடத்தினார். அப்போது அவரை காண பல்லாயிரக்கணக்கான இளைஞர்கள் திரண்டதால் அங்கு பரபரப்பான சூழல் ஏற்பட்டது. இதை அடுத்து அங்கு வந்த போலீஸார் அனைவரையும் கலைந்து செல்லுமாறு அறிவுறுத்தினர். மேலும் காவல்துறை டிடிஎப் வாசனையும் எச்சரித்தது.

இதையும் படிங்க: கட்டிங் ஒட்டிங் செஞ்ச நீங்க இத மறந்துட்டீங்களே! மதன் வெளியீட்ட வீடியோவுக்கு பதில் சொன்ன அய்யப்பன் ராமசாமி

அதையும் மீறி டிடிஎப் வாசன் அதிவேகமாக பைக் ஓட்டி வெளியிட்டு வந்தார். இதனிடையே கடந்த ஆண்டு நவம்பர் மாதம் டிக்டாக் பிரபலம் ஜிபி முத்துவை பின்னாள் உட்காரவைத்து அவரை அச்சுறுத்தும் வகையில் பைக் ஓட்டி அந்த வீடியோவை வெளியிட்டார். இதற்கு கண்டனங்கள் எழுந்தன. இதை அடுத்து டிடிஎப் வாசன் மீது கோவை போத்தனூர் காவல்நிலையத்தில் 2 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தது. அதேபோல் கோவை சூலூர் காவல்நிலையத்திலும் டிடிஎப் வாசன் மீது மேலும் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இது தொடர்பான வழக்கு விசாரணைக்காக நீதிமன்றத்தில் ஆஜரான டிடிஎப் வாசன் கோர்டு சூட்டுடன் காரில் வந்து கேஜிஎப் வசனத்துடன் கூடிய பிஜிஎம்-உடன் நடந்து வந்து வீடியோ வெளியிட்டார். இதுவும் சர்ச்சையானது.

இந்த நிலையில் இதுக்குறித்து தனியார் யூடியூப் சேனல் நெறியாளர் ஐயப்பன் ராமசாமி, டிடிஎப் வாசனிடம் கேள்வி எழுப்பினார். இதனால் ஆத்திரமடைந்த டிடிஎப் வாசன் மைக்கை கழற்றி வைத்துவிட்டு நேர்காணலின் பாதியில் எழுந்து சென்றார். இதனால் நெறியாளர் ஐயப்பன் ராமசாமி மீது டிடிஎப் வாசன் கோபத்தில் இருந்ததாக தெரிகிறது. இதனிடையே சமீபத்தில் நடத்தப்பட்ட ஸ்டிங் ஆபரேஷனில் நெறியாளர் ஐயப்பன் ராமசாமி சிக்கினார். அப்போது வெளியான வீடியோவில், ஐயப்பன் ராமசாமி, எனக்கு ட்விட்டர் விட இன்ஸ்ட்டாகிராமில் தான் டீனேஜ் பெண்கள் பாலோவர்ஸ் அதிகமாக உள்ளனர். அதனால்தான் எனது இன்ஸ்டாகிராம் கணக்கை அட்மினிடம் கொடுக்காமல் நானே பார்த்து வருகிறேன். அட்மினிடம் கொடுத்துவிட்டால் அவனே மொத்தத்தையும் சாப்ட்ருவான் என்று தெரிவித்திருந்தார். இது பெரும் சர்ச்சையானது. ஏற்கனவே ஐயப்பன் ராமசாமி மீது கோபத்தில் இருந்த டிடிஎப் வாசன் இதனை பயன்படுத்திக்கொண்டார். இதை அடுத்து ஐயப்பன் ராமசாமியின் பெண்கள் குறித்தான பேச்சுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் டிடிஎப் வாசன் வீடியோ ஒன்றை வெளியிட்டார். 

இதையும் படிங்க: சீரியல் ஹீரோயின் உடன் பைக்கில் செம்ம ஸ்பீடாக சென்ற TTF வாசன்... பயத்தில் அலறிய நடிகை - ஷாக் ஆன ரசிகர்கள்

அதில், கேவலம் பணத்துக்காக ஒருத்தரை பற்றி இழிவு படுத்தும் ஐயப்பன் ராமசாமிக்கு இனி மரியாதையே கிடையாது. வயசுக்கு கொடுக்கும் மரியாதையை அவர் இழந்து விட்டார். அவருக்கு ஆதரவாக இருக்கும் பெண்களையே சாப்ட்ருவாங்க என்று கேவலமாக பேசியுள்ளார். ஆனால் எந்த பெமினிசம் பேசும் ஒரு பெண் கூட அவருக்கு எதிராக குரல் கொடுக்கவில்லை. இதே வார்த்தையை நான் சொல்லி இருந்தால் உடனே வந்திருப்பார்கள். இந்த மாதிரியான ஆட்களை விட்டுவிட்டு சின்ன சின்ன விதி மீறல்களுக்கு எல்லாம் என்னை போன்ற ஆட்கள் மீது நடவடிக்கை எடுக்கிறார்கள். ஒருத்தன் அமுல் பேபி போல இருந்தால் உடனே அவனை பாலோவ் செய்யாதீர்கள். ஒருத்தருடைய உழைப்பை பார்த்து அவரை பாலோவ் செய்தால் அது உதவியாக இருக்கும். ஐயப்பன் ராமசாமியோட இன்டர்வியூவில் போட்டிருந்த அதே சட்டையை போட்டுகொண்டு அவர் மீது வெறியோடு இருக்கிறேன். கையில் சிக்கினா மூஞ்சி, மொகரைய உடைப்பேன் அவ்வளோ வெறியில இருக்கேன் என்று ஆவேசமாக பேசியுள்ளார். இது தற்போது வைரலாகி வருகிறது. 

PREV
click me!

Recommended Stories

Tamil News Live today 13 January 2026: தமிழகத்தில் அடுத்த 6 நாட்கள் மிதமான மழைக்கு வாய்ப்பு
மக்களே செல்போனில் சார்ஜ் போட்டு வச்சுக்கோங்க! தமிழகம் முழுவதும் முக்கிய இடங்களில் இன்று 5 முதல் 8 மணி நேரம் வரை மின்தடை!