அக்காவை கடத்துவதற்கு ஆள் வைத்த தங்கை! சினிமா பாணியில் கடத்தல் கும்பலை பிடித்த போலீசார்! பரபரப்பு...!

Asianet News Tamil  
Published : Feb 16, 2018, 11:14 AM ISTUpdated : Sep 19, 2018, 01:58 AM IST
அக்காவை கடத்துவதற்கு ஆள் வைத்த தங்கை! சினிமா பாணியில் கடத்தல் கும்பலை பிடித்த போலீசார்! பரபரப்பு...!

சுருக்கம்

Try to kidnap her sister!

கணவருடன் உள்ள தொடர்பை கண்டிக்க, தனது சகோதரியையே ஆள் வைத்து கடத்திய சம்பவம் திருச்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பெண் கடத்தப்பட்ட சம்பவத்தில் குற்றவாளிகளைத் திருச்சி போலீசார் சினிமா பாணியில் விரட்டிப்பிடித்து அசத்தியுள்ளனர்.

திருச்சி மாவட்டம், துவாக்குடியைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தியின் மனைவி புவனேஷ்வரி. கணவர் சில வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்டார். தனியாக வசித்து வரும் இவர், துவாக்குடி நகராட்சியில் பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில், புவனேஷ்வரி நேற்று வழக்கம்போல், அலுவலகத்தைவிட்டு வீட்டுக்கு நடந்து சென்றுக் கொண்டிருந்தார். 

ஆட்கள் நடமாட்டம் குறைவான தெரு வழியே புவனேஷ்வரி சென்று கொண்டிருந்தபோது, திடீரென அங்கு டாடா சுமோ கார் ஒன்று வந்தது. அதில் இருந்து இறங்கிய மர்ம நபர்கள், புவனேஸ்வரியை வலுக்கட்டாயமாக தூக்கி காருக்குள் இழுத்துச் சென்றனர். புவனேஸ்வரியின் அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்த பொதுமக்கள், காரை பிடிக்க முயன்றனர். ஆனால் அது முடியவில்லை. இதையடுத்து, துவாக்குடி போலீசுக்கு அவர்கள் தகவல் அளித்தனர்.

இந்த புகாரை அடுத்து, துவாக்குடி இன்ஸ்பெக்டர் தலைமையிலான போலீசார் மற்றும் பொதுமக்கள் அந்த காரை தொடர்ந்து சென்றனர். அந்த கார், துவாக்குடி அடுத்துள்ள மலைக்கோயில் அருகே சென்றபோது, போலீசார், அந்த காரை விரட்டிப் பிடித்தனர். கடத்தலில் ஈடுபட்ட அசோக் (எ) முனீஸ்வரன், மனோ, தீபன் சக்ரவர்த்தி, முத்துக்குமார் ஆகியோரை போலீவசார் கைது செய்தனர். இதன் பிறகு, கடத்தப்பட்ட புவனேஸ்வரியை  
மீட்டனர். மேலும் அவர்களிடம் இருந்த காரையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

இந்த கடத்தல் சம்பவம் குறித்து போலீசார் நடத்திய விசாரணையில், புவனேஸ்வரியின் சகோதரி சம்பந்தப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. இது குறித்து கைது  செய்யப்பட்டவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், கணவனை இழந்து வாழும் புவனேஷ்வரிக்கு, அவரது சகோதரி சரஸ்வதி குடும்பத்தினர் உதவியாக இருந்து வந்தனர். அதில் சரஸ்வதியின் கணவர் மதுரைவீரனுக்கும் புவனேஸ்வரிக்கும் தொடர்பு இருந்து வந்துள்ளது. இது குறித்து சகோதரி பல முறை கண்டித்தும் புவனேஷ்வரி கேட்கவில்லை என்று கூறப்படுகிறது. இதையடுத்து, சகோதரி புவனேஸ்வரியை கடத்த சொல்லி அவரது
உறவினர் அசோக்கிடம் கேட்டுக் கொண்டதாகவும், அதன் அடிப்படையில் புவனேஸ்வரியை காரில் கடத்தியதாகவும் தெரியவந்துள்ளது. இது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

PREV
click me!

Recommended Stories

2.30 மணி நேரம் தாமதமாக தொடங்கப்பட்ட பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி..!
Tamil News Live today 16 January 2026: 2.30 மணி நேரம் தாமதமாக தொடங்கப்பட்ட பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி..!