
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் பங்களாவிற்குள் அத்துமீறி நுழைந்து ஆட்சியரை தாக்க முயன்ற மூவரை போலீசார் கைது செய்தனர்.
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியராக புதிதாக பொறுப்பேற்ற கந்தசாமி ஐஏஎஸ், தனது ஆட்சியர் பங்களா வளாகத்தில் நடைப்பயிற்சி மேற்கொண்டிருந்தார். அப்போது அந்த பங்களாவிற்குள் அத்துமீறி நுழைந்த காஞ்சிபுரத்தை சேர்ந்த சிவா, சந்தோஷ், மணிகண்டன் ஆகிய மூவரும் ஆட்சியரை தாக்க முயன்றனர்.
அப்போது அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த போலீசார், மூவரையும் மடக்கிப் பிடித்து கைது செய்தனர். இதுதொடர்பாக திருவண்ணாமலை கிழக்கு காவல்நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து அந்த மூவரிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆட்சியர் பங்களாவிற்குள் அத்துமீறி நுழைந்து ஆட்சியரையே மூவர் தாக்க முயற்சித்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.