பெரம்பலூர் அருகே கார் மீது லாரி மோதிய விபத்து - ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பலி..

 
Published : Mar 15, 2017, 10:06 PM ISTUpdated : Sep 19, 2018, 02:42 AM IST
பெரம்பலூர் அருகே கார் மீது லாரி மோதிய விபத்து - ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பலி..

சுருக்கம்

Truck collision on the car - from the same family killed in 3 ..

பெரம்பலூர் அருகே கார் மீது லாரி மோதியதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  

சென்னை ஆவடியை சேர்ந்தவர் ஜேம்ஸ்ராஜ். இவர், தன் குடும்பத்தினருடன் காரில் திருச்சியில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தனர்.

பெரம்பலூர் மாவட்டம் வாலிகண்டபுரம் அருகே சென்று கொண்டிருந்தபோது, முன்னே சென்று கொண்டிருந்த லாரி திடீரென வலது புறமாக திரும்பியது.

அப்போது லாரி பின்னால் வந்து கொண்டிருந்த கார் மீது பயங்கரமாக மோதியது. இதில், காரின் முன்புறம் நொறுங்கியதில் இரண்டு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

மேலும், மூன்று பேர் படுகாயம் அடைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த மூன்று பேரை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

அதில் ஒருவர் வழியிலேயே உயிரிழந்தார். இதையடுத்து, விபத்துக்குக் காரணமான லாரி ஓட்டுநர் அலெக்ஸ் பாண்டியனை போலீஸார் கைது செய்தனர்.

PREV
click me!

Recommended Stories

உங்கள் மிரட்டலுக்கு திமுக தலைமை அல்ல... தொண்டன் கூட பயப்பட மாட்டான்..! துணைக்கு கூட்டம் சேர்க்கும் உதயநிதி
ஆம்னி பேருந்து ஆற்று பாலத்தில் தடுப்பை உடைத்து தொங்கிய பேருந்து.. தூக்கித்தில் இருந்த 40 பயணிகளின் நிலை என்ன?