மரங்களை வெட்டியவருக்கு நூதன தண்டனை... 10 மரக்கன்றுகள் நட்டு பராமரிக்க வேண்டும்...

 
Published : Oct 13, 2016, 06:32 AM ISTUpdated : Sep 19, 2018, 02:56 AM IST
மரங்களை வெட்டியவருக்கு நூதன தண்டனை... 10 மரக்கன்றுகள் நட்டு பராமரிக்க வேண்டும்...

சுருக்கம்

கோவையில், மரங்களை வெட்டியவருக்கு 10 மரக்கன்றுகள் நட்டு பராமரிக்க வேண்டும் என்று நூதன முறையில் தண்டனை அளிக்கப்பட்டுள்ளது.

இயந்திரமயமான இந்த உலகில் ஒவ்வொரு நாளும் புவி வெப்பமடைந்து கொண்டே வருகிறது. காடுகள் அழிக்கப்பட்டு நகரமயமாக்கப்பட்டு வருகின்றன. இதனால், சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுகிறது. இந்த நிலை தொடர்ந்தால், இன்னும் சில ஆண்டுகளில் தமிழகம் பாலைவனம் ஆகிவிடும் என்று ஆய்வுக் கட்டுரை ஒன்று கூறுகிறது. 

இந்த அபாயத்தை தடுக்க பல்வேறு அமைப்புகள் மரம் வளர்க்க ஏற்பாடுகள் செய்து வருகின்றன. இவர்கள் லட்சக்கணக்கில் மரக்கன்றுகளை இலவசமாக கொடுத்தும், மரக்கன்றுகள் நட்டும் வருகின்றன. இந்த நிலையில் மரத்தை வெட்டுவது பெரும் குற்றமாகக் கூட கருதப்படுகிறது. ஒரு மரத்தை வெட்டினால் 10 மரக்கன்றுகளை நட வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது.

கோவை, மேட்டுப்பாளையம் சாலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு 4 வழிச்சாலையாக மாற்றப்பட்டபோது அங்கிருந்த 600-க்கும் மேற்பட்ட புளியமரங்கள் வெட்டப்பட்டன. அதனைத் தொடர்ந்து சோலைவனம் கோவை 

துடியலூரில் தனியார் வணிக வளாகத்தின் முன்பு இருந்த ஒரு மரத்தை நிறுவன ஊழியர் கார்த்திக் என்பவர் வெட்டியுள்ளார்.

இது தொடர்பாக போலீசில் புகார் தெரிவிக்கப்பட்டது. மரம் வெட்டியது தொடர்பாக போலீசார் விசாரித்ததில், கார்த்தி மற்றும் அவரது நண்பர்கள் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. மரம் வெட்டிய கார்த்தி மற்றும் நண்பர்களுக்கு போலீசார் நூதன முறையில் தண்டனை அளித்துள்ளனர். என்ன தண்டனை என்றால், ஒரு மரம் வெட்டியதற்காக 10 மரக்கன்றுகளை வைத்து பராமரிக்க வேண்டும் என்று நூதன முறையில் தண்டனை அளித்தனர்.

ஒரு மரம் வெட்டினால் 10 மரக்கன்றுகள் நட்டு, பராமரிக்கப்பட வேண்டும் என்பது நீதிமன்ற அறிவுறுத்தல். இந்த நிலையில் மரம் வெட்டிய கார்த்திக் மற்றும் அவரின் நண்பர்களுக்கு கோவை மாவட்ட போலீசார் நூதன முறையில் தண்டனை வழங்கியுள்ளது பாராட்டுதற்குரியது.

PREV
click me!

Recommended Stories

தவெக கூட்டத்தில் உணவு கிடையாது.. தண்ணீர் பாட்டில் மட்டும்தான்.. செங்கோட்டையன் விளக்கம்
தொடர் விடுமுறை.. சொந்த ஊர் போறீங்களா?.. போக்குவரத்துக்கழகம் சொன்ன குட்நியூஸ்..!