
கிருஷ்ணகிரி மாவட்டம் மாதினாயனப்பள்ளி கிராமத்தில் உடும்பு கரி சமைத்த 7 பேரை வனத்துறை அதிகாரிகள் கைது செய்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள வனப்பகுதியில் மான், சிறுத்தைபுலி, பாம்பு, உடும்பு போன்ற அனைத்து விதமான வன விலங்குகளும் உள்ளது. இந்த வன விலங்களை பாதுகாக்க வனத்துறையினர் தீவிர முயற்ச்சி மேர்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் இன்று கிருஷ்ணகிரி வனச்சரகர் நாகேஷ் தலைமையில் வனத்துறையினர் நாரலப்பள்ளி காப்புகாடு அருகே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, மாதினாயனப்பள்ளி அருகே சிலர் உடும்பு கரி சமைப்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்களை பிடித்து மேற்கொண்ட விசாரணையில்,
நாரலப்பள்ளி காப்புகாட்டில் இருந்து பிடித்து வந்து இரண்டு உடும்புகளை சமைத்து கொண்டிருந்ததாக தெரிவித்தனர்.
இதையடுத்து உடும்பை கொன்றதால் பெங்களூர் மற்றும் தருமபுரியை சேர்ந்த 7 பேரை வன உயிரின பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வனத்துறையினர் கைது செய்தனர்.