அரசு விரைவு பேருந்துகளில் கட்டண சலுகை நீக்கம்- அதிரடி அறிவிப்பு வெளியிட்ட போக்குவரத்து துறை

Published : Apr 18, 2023, 01:46 PM IST
அரசு விரைவு பேருந்துகளில் கட்டண சலுகை நீக்கம்- அதிரடி அறிவிப்பு வெளியிட்ட போக்குவரத்து துறை

சுருக்கம்

அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் கோடை விடுமுறை முழுவதும் 'லீன் கட்டண முறையை' நீக்கியதால், வார நாட்களில் அரசு ஏசி மற்றும் செமி ஸ்லீப்பர் பேருந்துகளில் ஒவ்வொரு டிக்கெட்டுக்கும் 50 முதல் 150 வரை கட்டணம் அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. 

பேருந்து கட்டண சலுகை

போக்குவரத்து துறை சார்பாக பயணிகள் எண்ணிக்கையை அதிகரிக்கும் வகையில்,  கடந்த 2019 ஆம் ஆண்டு அரசு விரைவு போக்குவரத்து கழகம் சார்பில் எளிய கட்டண முறை அறிமுகப்படுத்தப்பட்டது. அதன்படி பயணிகளை ஈர்ப்பதற்காக வார நாட்களில் பேருந்துகளில் பயணம் செய்யும் போது 10% முதல் 25% வரை கட்டணம் குறைத்து நிர்ணயம் செய்யப்பட்டது . அதேசமயம் வார இறுதி நாட்களில் அதாவது வெள்ளி, சனி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் சலுகைகள் எதுவும் இல்லாமல் கட்டணம் வசூலிக்கப்பட்டது. இந்தநிலையில் தமிழக போக்குவரத்து கழகம் கடுமையான நஷ்டத்தில் இயங்கி வருகிறது. இதன் காரணமாக ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு பணம் பட்டுவாடா செய்ய முடியாத நிலையில் உள்ளது. 

கர்நாடக தேர்தலுக்காக கட்டுக்கட்டாக பணத்தோடு ஹெலிகாப்டரில் வந்தேனா.? புகாருக்கு பதிலடி கொடுத்த அண்ணாமலை

சலுகை கட்டணம் நீக்கம்

தொழிலாளர்கள் போராட்டத்திலும் ஈடுபட்டு வருகின்றனர். இந்தநிலையில் அரசு விரைவு போக்குவரத்து கழகத்தில் கோடை விடுமுறை முழுவதும் லீன் கட்டண முறை நீக்கம் செய்யப்படுகிறது என போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,  அரசு விரைவு பேருந்துகளில் ஜூன் 15 வரை கட்டணச் சலுகை கிடையாது என அறிவிக்கப்பட்டுள்ளது. கோடை விடுமுறையில் பயணிகள் கூட்டம் அதிகரிக்கும் என்பதால் போதிய வருவாய் ஈட்ட போக்குவரத்து கழகம் திட்டமிட்டுள்ளதாக வெளியான நிலையில் இந்த விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 50 முதல் 150 ரூபாய் வரை கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்

அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியா.? தேர்தல் ஆணையத்தில் புதிய மனு கொடுத்து செக் வைத்த ஓபிஎஸ்

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

செக் மேட் ரெடி.! மீண்டும் முலமைச்சராக நடிகர்.! இனிதான் ஆட்டமே இருக்கு!
திமுக கூட்டணியில் பிளவு? முதல் ஆளாக தாவெக-வுக்கு ஓடும் சிபிஎம்! அதிரடி பின்னணி!