பேருந்தில் தொங்கி செல்லும் மாணவர்களுக்கு எச்சரிக்கை! டிரைவர், நடத்துநருக்கு புதிய உத்தரவிட்ட போக்குவரத்துதுறை

By Ajmal KhanFirst Published Feb 9, 2023, 7:59 AM IST
Highlights

பேருந்துகளில் ஆபத்தான பயணம் மேற்கொள்ளும் மாணவர்கள் மீது புகாரளிக்கலாம் என போக்குவரத்து துறை போக்குவரத்து மண்டலங்களுக்கு சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது. 

மாணவர்களின் ஆபத்தான பயணம்

தமிழகத்தில் பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவர்கள் பேருந்தின் படிக்கட்டுகள், மேல் கூரை உள்ளிட்ட இடங்களில் தொங்கி செல்லும் நிலையானது தினந்தோறும் நடைபெற்று வருகிறது. இதனால் மாணவர்கள் விபத்தில் சிக்கும் நிலையும் தொடரந்து நிகழ்கிறது. இதனை கருத்தில் கொண்டு ஓட்டுநர்களுக்கு பல்வேறு அறிவுரைகளை போக்குவரத்து கழகம் ஏற்கனவே வெளியிட்டிருந்தது. அதில் பேருந்தில் படிகட்டில் தொங்கி செல்லும் மாணவர்கள் தொடர்பாக பள்ளி ஆசிரியரிடம் புகார் அளிக்கலாம் என்றும், மாணவர்களின் பாதுகாப்புக்கு ஓட்டுநர்களே பொறுப்பு என கூறப்பட்டிருந்தது. இந்தநிலையில் தற்போது புதிய உத்தரவுகளை போக்குவரத்து துறை வெளியிட்டுள்ளது. 

ஆ.ராசாவுக்கு எதிரான சொத்துக்குவிப்பு வழக்கு.. சிறப்பு நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

போலீசில் புகார்

போக்குவரத்து மேலான் இயக்குனர் வெளியிட்டுள்ள அந்த சுற்றறிக்கையில், மாணவர்களின் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்வது ஓட்டுநர், நடத்துநர்களின் பொறுப்பு என குறிப்பிடப்பட்டுள்ளது. பாதுகாப்பற்ற முறையில் மாணவர்கள் பயணிக்க முற்பட்டால் பேருந்தை நிறுத்தி அறிவுரை வழங்க வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் மாணவர்களுக்கு அறிவரை வழங்கியும் தொடர்ந்து மாணவர்கள் ஆபத்தான முறையில் பயணம் செய்தால் காவல் நிலையத்துக்கோ, அவசர அழைப்பு எண்ணான 100ஐ அழைத்தோ தகவல் தெரிவிக்கலாம் என கூறப்பட்டுள்ளது. அறிவுரை கேட்காதோர் மீது போக்குவரத்து கழகத்திடம் ஓட்டுநர், நடத்துநர் புகாரளிக்க வேண்டும் ஓட்டுநர் மற்றும் நடத்துநருக்கு என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதையும் படியுங்கள்

அஞ்சல்துறையில் தமிழர்களை திட்டமிட்டு புறக்கணிக்க சதி! விண்ணப்பத்தை மாத்துல அவ்வளவுதான்! வேல்முருகன் எச்சரிக்கை

click me!