சூப்பர் சான்ஸ்.! கூட்டுறவு வங்கியில் தங்க மதிப்பீட்டாளர் பணி.! அசத்தல் அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு

Published : Sep 26, 2025, 01:08 PM IST
How do I apply for an online gold loan and what documents are required?

சுருக்கம்

Gold Appraiser : கூட்டுறவு மேலாண்மை நிலையம், அரசு அங்கீகாரம் பெற்ற நகை மதிப்பீட்டாளர் பகுதி நேர பயிற்சியை வழங்குகிறது. இப்பயிற்சியை முடிப்பவர்களுக்கு கூட்டுறவு வங்கிகள் மற்றும் தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்பு பெறலாம். 

Co-operative bank job vacancies : தமிழக அரசு சார்பாக பல்வேறு வேலைவாய்ப்புகளை உருவாக்கி வருகிறது. அந்த வகையில் சென்னை கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் நகை மதிப்பீடும், அதன் நுட்பங்களும் தொடர்பான பகுதி நேர பயிற்சி (PART TIME COURSE) அக்டோபர் 2025 மாதம் 15 ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெறவுள்ளது. இதற்கான விண்ணப்பங்கள் தற்போது நேரடியாக பயிற்சி நிலையத்தில் வழங்கப்பட்டு வருகிறது. 

இப்பயிற்சி தங்கத்தின் தரமறிய, தங்கத்தின் இன்றைய நவீன தொழில் நுட்பம், நகைக்கடன் வட்டி கணக்கிடுதல், KDM மற்றும் HALL MARK பற்றிய விவரங்கள் தெரிந்து கொள்ளலாம், இப்பயிற்சிக்கான உபகரணங்கள் பயிற்சி நிலையத்தின் மூலமே பயிற்சியாளர்களுக்கு வழங்கப்படும்.

தங்க நகை மதிப்பீட்டாளர் பயிற்சி

இப்பயிற்சி முடித்தவர்களுக்கு தமிழக அரசால் அங்கீகரிக்கப்பட்ட தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியத்தின் சான்றிதழ் வழங்கப்படும். இச்சான்றிதழை வேலை வாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து கொள்ளலாம் பயிற்சி முடித்தவர்கள் கூட்டுறவு வங்கிகள் மற்றும் தனியார் நிறுவனங்களில் தங்க நகை மதிப்பீட்டாளராக பணிபுரிய வாய்ப்பு உள்ளது.இப்பயிற்சிக்கான கல்வித் தகுதி 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற ஆண், பெண் இருபாலரும் பயிற்சியில் பயிற்சி பெறலாம்.

கூட்டுறவு வங்கியில் பணியில் சேர வாய்ப்பு

வயது வரம்பு ஏதும் இல்லை. வாரத்திற்கு 2 நாட்கள் (சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை) மட்டும் பயிற்சி நடைபெறும். பயிற்சிக் கட்டணம் ரூ. 4550/- மட்டுமே (உபகரணங்கள் உட்பட) பயிற்சி முடித்து தேர்ச்சிக்குப் பின்னர் தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றிய சான்றிதழ் வழங்கப்படும் பயிற்சிக்கான விண்ணப்பம் 22.09.2025 முதல் 14.10.2025 (விடுமுறை நாட்கள் நீங்கலாக) வழங்கப்படும். விண்ணப்ப கட்டணம் ரூ. 100/-(GST கட்டணம் நீங்கலாக) ஆகும். மேலும் விபரங்களுக்கு சென்னை கூட்டுறவு மேலாண்மை நிலையம் எண். 215 பிரகாசம் சாலை பிராட்வே சென்னை-1. என்ற முகவரியிலோ அல்லது தொலைபேசி எண் 044-25360041 மற்றும் 9444470013 மூலமாகவோ தொடர்பு கொள்ளலாம்.

 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

விஜய் கொடுத்த அசைன்மெண்ட்..! செங்கோட்டையனின் வருகைக்கு பின் அடியோடு மாறிய தவெக..!
திமுக கூட்டணிக்குள் விஜய் வைத்த வேட்டு..! இருதலைக் கொல்லியான காங்கிரஸ்..! மு.க.ஸ்டாலின் பகீர் முடிவு..!