கல்வி டி.வி.யில் போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள்; எந்தெந்த நாட்கள் ஒளிபரப்பாகும்? முழு விவரம்!

By Rayar r  |  First Published Dec 28, 2024, 1:23 PM IST

தமிழ்நாடு அரசின் கல்வி தொலைக்காட்சியில் போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள் ஒளிபரப்பாக உள்ளன. இது குறித்த முழு விவரங்களை இந்த செய்தியில் விரிவாக பார்க்கலாம். 


போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள்

தமிழ்நாட்டில் டிஎன்பிஎஸ்சி, வங்கி பணிகள், ரயில்வே, யுபிஎஸ்சி, எஸ்எஸ்சி உள்பட பல்வேறு அரசு பணிகளுக்கு லட்சக்கணக்கான மாணவர்கள் தயாராகி வருகின்றனர். பெரும்பாலான மாணவர்கள் தனியார் நடத்தும் போட்டித தேர்வு பயிற்சி மையங்களில் சேர்ந்து படித்து வருகின்றனர். இது தவிர தமிழ்நாடு அரசின் 'நான் முதல்வன் திட்டம்' சார்பில் மாணவ, மாணவிகளுக்கு போட்டித் தேர்வுகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

Tap to resize

Latest Videos

undefined

மேலும் போட்டித் தேர்வுகளுக்கு தயாராவோருக்கு உதவிடும் வகையில் தமிழ்நாடு அரசின் 'கல்வி தொலைக்காட்சி'யில் கட்டணமில்லா போட்டித் தேர்வு பயிற்சி வகுப்புகள் ஒளிபரப்பப்பட்டு வருகின்றன. அந்த வகையில் வரும் டிசம்பர் 30ம் தேதி (திங்கட்கிழமை) முதல் ஜனவ்ரி 3ம் தேதி (வெள்ளிக்கிழமை) வரை போட்டித் தேர்வுகளுக்கான கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் ஒளிபரப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

எந்தெந்த நாட்கள்? 

அதாவது டிசம்பர் 30ம் தேதி (திங்கட்கிழமை), டிசம்பர் 32ம் தேதி (செவ்வாய்க்கிழமை), ஜனவரி 1ம் தேதி (புதன்கிழமை), 2ம் தேதி (வியாழக்கிழமை), 3ம் தேதி (வெள்ளிக்கிழமை) என 5 நாட்கள் போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள் ஒளிபரப்பாகின்றன. இந்த 5 நாட்களிலும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு வாரியம்,  தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம், ஆசிரியர் தேர்வு வாரியம், ரயில்வே தேர்வு வாரியம், வங்கி பணியாளர் தேர்வு வாரியம் நடத்தும் தேர்வுகளுக்கு பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும். 

டிசம்பர் 30ம் தேதி முதல் ஜனவ்ரி 3ம் தேதி வரை தினமும் காலை 7 மணி முதல் காலை 9 மணி வரை பயிற்சி வகுப்புகள் ஒளிபரப்பாகும். இதே பயிற்சி வகுப்புகள் மேற்கண்ட நாட்களில் இரவு 7 மணி முதல் இரவு 9 மணி வரை மறு ஒளிபரப்பு செய்யப்படும். 2 மணி நேர பயிற்சி வகுப்பில் தனித்தனியாக ஒவ்வொரு பாடத்துக்கும் தனித்தனியாக 30 நிமிடங்கள் பிரிக்கப்பட்டு வகுப்புகள் நடைபெறும்.

யூடியூப் சேனலில் பார்க்கலாமா?

ஆகவே போட்டித் தேர்வுக்கு தயாராகும் மாணவ, மாணவிகள் மேற்கண்ட நாட்களில் கல்வி தொலைக்காட்சியில் பயிற்சி வகுப்புகளை பார்த்து பயன்பெறலாம். இந்த பயிற்சி வகுப்புக்கு எந்த கட்டணமும் கிடையாது. கல்வி தொலைக்காட்சி மட்டுமின்றி TN Career Services Employment என்ற யூடியூப் சேனலிலும் போட்டித் தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் ஒளிபரப்பு செய்யப்படும். 

போட்டித் தேர்வுகளுக்கான விவரங்கள் மற்றும் போட்டித்தேர்வுகளுக்கான பாடகுறிப்புகளை https://tamilnaducareerservices.tn.gov.in/ என்ற இணையதளம் சென்று டவுன்லோட் செய்து கொள்ளலாம்.
 

click me!