காவல்துறை தடையை மீறி பிரேமலதா பேரணி; திரண்ட தேமுதிக தொண்டர்கள்; குலுங்கிய சென்னை!

By Rayar r  |  First Published Dec 28, 2024, 9:46 AM IST

சென்னையில் காவல்துறை தடையை மீறி தேமுதிகவினர் பேரணியாக சென்றனர். இதனால் சென்னையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 


நடிகரும், தேமுதிக தலைவருமாக இருந்த கேப்டன் விஜயகாந்த் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 28ம் தேதி உடல்நலக்குறைவால் காலமாமானர். கேப்டன் விஜயகாந்தின் முதலாம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இந்த முதலாம் ஆண்டு நினைவு தினத்தை குருபூஜையாக கடைபிடிக்க தேமுதிக முடிவு செய்துள்ளது.

இந்நிலையில் இன்று தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த தலைமையில் மாநில தேர்தல் ஆணையம் அலுவலகத்தில் இருந்து விஜயகாந்த் நினைவிடம் வரை அமைதிப்பேரணி செல்ல அக்கட்சி திட்டமிட்டு இருந்தது. ஆனால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படும் எனக்கூறி இந்த பேரணிக்கு காவல்துறை அனுமதி மறுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tap to resize

Latest Videos

undefined

இந்த அமைதி பேரணிக்கு தேமுதிகவினர் முன்கூட்டியே காவல் துறையிடம் அனுமதி கேட்ட நிலையில், கடைசி நேரத்தில் காவல்துறை அனுமதி மறுத்துள்ளது தேமுதிக தொண்டர்கள் இடையே கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது. ''ஒவ்வொரு ஆண்டும் முன்னாள் முதல்வரர் கருணாநிதி தினத்தின்போது திமுகவினர் அமைதி பேரணி செல்கிறனர். 

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவு தினத்தின்போது அதிமுகவினர் அமைதி பேரணி செல்கின்றனர்.இந்த பேரணிகளுக்கு காவல்துறை அனுமதி கொடுக்கிறது. ஆனால் கேப்டன் விஜயகாந்த் பேரணிக்கு மட்டும் காவல்துறை மறுப்பு தெரிவிப்பது ஏன்?'' என தேமுதிக தொண்டர்கள் கேள்வி எழுப்பி இருந்தனர். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய தேமுதிக துணை பொதுச்செயலாளர் பார்த்தசாரதி,,''அமைதி பேரணிக்கு அனுமதி கோரி கடந்த 5ம் தேதியே காவல் துறையிடம் கடிதம் வழங்கினோம். 

ஆனால் நேற்று மாலை கடைசி நேரத்தில் காவல் துறை அனுமதி மறுத்துள்ளது. திட்டுமிட்டு வேண்டுமென்றே அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. காவல்துறை முன்பே அனுமதி மறுத்திருந்தால் நீதிமன்றத்தை அணுகி அனுமதி பெற்றிருப்போம். ஆனால் பேரணிக்கு கடைசி நேரத்தில் அனுமதி மறுத்தது ஏன்? கலைஞர், ஜெயலலிதா நினைவு நாள், பிறந்த நாளின் போது பேரணிக்கு அனுமதி தரும் காவல்துறை, கேப்டன் விஜயகாந்த் பேரணிக்கு மட்டும் அனுமதி மறுப்பது ஏன்?

கோயம்பேட்டில் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் எனக்கூறி பேரணிக்கு அனுமதி மறுத்திருக்கிறார்கள். அப்படி என்றால் கலைஞர், ஜெயலலிதா நினைவு தினத்தில் பேரணியாக செல்லும்போது, மெரினா கடற்கரை சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படாதா? பேரணியில் அதிகளவு தொண்டர்கள், மக்கள் பங்கேற்பார்கள்; இதனால் தேமுதிகவின் பலம் வெளியில் தெரிந்து விடும் என திட்டமிட்டே காவல்துறை அனுமதி மறுத்துள்ளது. ஆகவே முதல்வர் ஸ்டாலின் இந்த விஷயத்தில் தலையிட்டு அமைதி பேரணிக்கு அனுமதி அளிக்க காவல்துறைக்கு உத்தரவிட வேண்டும்'' என்றார்.

இந்நிலையில், காவல்துறை அனுமதி மறுத்த நிலையில் தேமுதிகவினர் தடையை மீறி பேரணியாக சென்றனர். தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் அக்கட்சியின் முக்கிய நிர்வாகிகள், தொண்டர்கள் தேர்தல் ஆணைய அலுவலகத்தில் இருந்து கேப்டன் விஜயகாந்த் நோக்கி பேரணியாக சென்றனர். பல ஆயிரக்கணக்கான தேமுதிக தொண்டர்கள் இந்த பேரணியில் கலந்து கொண்டனர். இதனால் சென்னையில் பரபரப்பு நிலவி வருகிறது.

click me!