தஞ்சையில் சோகம்: குடும்ப சொத்தில் பங்கு தர மறுத்த பெற்றோர்; எலி மருந்தை சாப்பிட்டு உயிரை விட்ட மகள்... 

First Published Apr 17, 2018, 8:23 AM IST
Highlights
Tragedy in Tanjore Parents who refused to share family wealth The daughter who lives with the mouse.


தஞ்சாவூர் 

தஞ்சாவூரில், குடும்ப சொத்தில் பங்கு தர பெற்றோர் மறுத்தவிட்டதால் எலி மருந்தை சாப்பிட்டு மகள் தற்கொலை செய்து கொண்டார். 

தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை தாலுகா ஒட்டங்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் ராமசாமி. இவருடைய மனைவி கல்யாணி. இவர்களுடைய மகள் சுமதி (38). சுமதிக்கு திருமணமாகி பட்டுக்கோட்டை நாடி முத்து நகரில் கணவர் பாலசுப்பிரமணியனுடன் வசித்து வந்தார்.

இந்த நிலையில், சுமதி தனது பெற்றோரிடம் குடும்ப சொத்தில் தனக்கு சேர வேண்டிய பங்கை பிரித்து கொடுக்கும்படி கேட்டுள்ளார். இதற்கு அவரது பெற்றோர் மறுத்துவிட்டதால் சுமதி மனமுடைந்தார். 

இந்த நிலையில், வீட்டில் இருந்த எலி மருந்தை சாப்பிட்டு மயங்கி விழுந்தார் சுமதி. இதில் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த சுமதியை அவரது உறவினர்கள் மீட்டு தஞ்சை மருத்துவகல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சுமதி பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்த புகாரின்பேரில் பட்டுக்கோட்டை நகர காவல் உதவி ஆய்வாளர் செங்குட்டுவன் மற்றும் காவலாளர்கள் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

குடும்ப சொத்தில் பங்கு தரா பெற்றோர் மறுத்ததால் மகள் எலி மருந்து சாப்பிட்டு இறந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

click me!