ஜெயலலிதா போல விஜயகாந்துக்கும் டிரக்கியாஸ்டமி சிகிச்சை! மருத்துவமனை கொடுத்த புதிய அப்பேட்!

By SG Balan  |  First Published Nov 29, 2023, 8:57 PM IST

முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்டதைப் போன்ற டிரக்கியாஸ்டமி சிகிச்சையை விஜயகாந்த்க்கும் அளிப்பது பற்றி மருத்துவர்கள் பரிசீலித்து வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.


தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நலக்குறைவு காரணமாக சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்டதைப் போன்ற டிரக்கியாஸ்டமி சிகிச்சை அளிப்பது பற்றி மருத்துவர்கள் பரிசீலித்து வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்த் நவம்பர் 18ஆம் தேதி உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சளி, இருமல் பிரச்சினைகள் இருந்ததால் அவருக்கு செயற்கை சுவாசக்கருவிகள் பொருத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

Tap to resize

Latest Videos

விஜயகாந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதும் விஷமிகள் அவரது உடல்நிலை குறித்த வதந்திகளைக் கிளப்பிவிட்டனர். அதற்கு மறுப்பு தெரிவித்த தேமுதிக, விஜயகாந்த் வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காகவே சென்றுள்ளார் என்றும் சில தினங்களில் வீடு திரும்புவார் என்றும் கூறப்பட்டது.

அர்னால்டு டிக்ஸ் யார்? சுரங்கத் தொழிலாளர்களை மீட்க ஆஸ்திரேலிய நிபுணர் செய்தது என்ன?

கேப்டன் நலமாக இருக்கிறார். விரைவில் முழு உடல் நலத்துடன் வீடு திரும்பி, நம் அனைவரையும் சந்திப்பார்.

- திருமதி. பிரேமலதா விஜயகாந்த் pic.twitter.com/P9iHyO7hzG

— Vijayakant (@iVijayakant)

இந்நிலையில், புதன்கிழமை மதியம் விஜயகாந்த் உடல்நிலை பற்றி மருத்துவமனை சார்பில் அறிக்கை ஒன்று வெளியாகியுள்ளது. அதில், விஜயகாந்த் உடல்நிலை சீராக இல்லை என்றும் இன்னும் 14 நாட்கள் மருத்துவமனையில் வைத்து தொடர் சிகிச்சை அளிக்கவேண்டிய அவசியம் இருக்கிறது என்றும் கூறப்பட்டுள்ளது.

பின்னர், வெளியான மற்றொரு மருத்துவ அறிக்கையில், விஜயகாந்த் வெண்டிலேட்டர் சிகிச்சை அளிக்கப்படுகிறது என்று கூறப்பட்டிருக்கிறது. விஜயகாந்துக்கு ஏற்பட்டுள்ள சுவாச பிரச்சினைக்காக டிரக்கியாஸ்டமி செய்வது குறித்தும் மருத்துவர்கள் ஆலோசனை நடத்தி வருவதாகவும் மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூச்சுக்குழாயில் சிறிய துளையிட்டு சுவாசத்தை சீராக்கும் மருத்துவ சிகிச்சை டிரக்கியாஸ்டமி எனக் கூறப்படுகிறது. சுவாசக் கோளாறு உள்ளவர்களுக்கு இந்த சிகிச்சை அளிக்கப்படுகிறது. கழுத்தில் போடப்படும் சிறிய துவாரத்தில் குழாய் பொருத்தப்படும். இந்த டிரக்கியாஸ்டமி குழாய் மூலமாக சுவாசிக்க முடியும்.

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது வெண்டிலேட்டர் சிகிச்சையும், அதைத் தொடர்ந்து டிரக்கியாஸ்டமி சிகிச்சையும் அளிக்கப்பட்டது நினைவூட்டத்தக்கது.

உலகின் 8வது அதிசயமாக அறிவிக்கப்பட்ட கம்போடியாவின் அங்கோர் வாட் கோயில்!

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும். Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

click me!