கோவை மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் கன மழை காரணமாக பவானிசாகர் அணையின் நீர்மட்டம் அதிகரித்துள்ளது. மேலும் கொடிவேரி அணையில் இருந்து அதிகளவு தண்ணீர் திறப்பதால் சுற்றுலா பயணிகள் அணைக்கட்டு பகுதிக்கு வர தடை விதிக்கப்பட்டுள்ளது.
பவானி சாகர் நீர்மட்டம் உயர்வு
தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கத்திற்கு மத்தியில் பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக கோவை,நெல்லை போன்ற மாவட்டங்களில் கன மழை பெய்து வருகிறது. இந்தநிலையில் மேட்டுப்பாளையம் பில்லூர் அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீர் மேட்டுப்பாளையம் பவானி ஆறு வழியாக பவானிசாகர் அணைக்கு வருவதாலும் அணை நீர்ப்பிடிப்பு பகுதியில் கன மழையாலும் பவானிசாகர் அணை நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. இதன் காரணமாக அணை நீர்மட்டம் நேற்று ஒரே நாளில் 1.5 அடி உயர்ந்துள்ளது. இன்று காலை 6 மணி நிலவரப்படி 6ஆயிரத்து 357 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. நீர்வரத்து மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கொடிவேரி அணையில் சுற்றுலா பயணிகள்
தற்போது அணை நீர்மட்டம் 47.23 அடியாகவும் , பவானி ஆற்றில் தண்ணீர் நிறுத்தம் செய்யப்பட்டு கீழ்பவானி வாய்க்காலில் வினாடிக்கு 5 கன அடி தண்ணீர் மட்டும் திறந்து விடப்படுகிறது. இதே போல ஈரோடு மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற சுற்றுலா தளங்களில் ஒன்றானது கொடிவேரி அணை,இந்த அணையில் ஈரோடு மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்களிலிருந்தும்,வெளி மாநிலங்களிலிருந்தும் ஏராளமான சுற்றுலா பயனிகள் வருவது வழக்கம், இந்த நிலையில் பவானிசாகர் அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் மற்றும் கோபிசெட்டிபாளையம் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று இரவு பெய்த கன மழையால் அணைக்கு வரும் உபரிநீர் பவானி ஆறு வழியாக வெளியேற்றப்பட்டு வருகிறது,
கொடிவேரி அணை - நீர் திறப்பு அதிகரிப்பு
இதனால் கொடிவேரி அணை வழியாக 600 கன அடி உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. கொடிவேரி அணை வழியாக அதிக அளவு உபரி நீர் வெளியேறி வருவதால் சுற்றுலா பயனிகளின் நலன் கருதி சுற்றுலா பயனிகள் கொடிவேரி அணைகட்டுக்கு வரவும், பரிசல் பயனம் மேற்கொள்ளவும் பொதுபணித்துறை அதிகாரிகள் தடை விதித்துள்ளனர்.
Dhanushkodi : தனுஷ்கோடிக்கு சுற்றுலா பயணிகள் செல்ல திடீர் தடை.!! காரணம் என்ன.?