“மக்களே... உஷார்.... நாளை முதல் வெயில் தாக்கம் அதிகரிக்கும்...” - வானிலை ஆய்வாளர்கள் தகவல்

First Published May 13, 2017, 12:53 PM IST
Highlights
Tomorrow will increase the effect of sunlight


கடந்த 4ம் தேதி கத்திரி வெயில் தொடங்கியது. ஆனால், அடுத்த நாள் மாலையில் சென்னை நகர் முழுவதும் லேசான சாரல் மழை இருந்தது. இதையொட்டி சென்னை புறநகர் பகுதிகள், காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் பலத்த மழை பெய்தது.

மேலும் மதுரையில் பெய்த கனமழையின்போது, மின்னல்தாக்கி சிறுவன் உள்பட 4 பேர் பலிதாபமாக இறந்தனர். இதை தொடர்ந்து மாநிலத்தில் ஆங்காங்கே மழை பெய்து வருகிறது.

இந்நிலையில், தனியார் வானிலை மையம், நாளை முதல் தமிழகம் வெப்ப சலனம் ஏற்படும் அறிவித்துள்ளது.

அதில், வடமேற்கு திசையில் இருந்து‌ ஈரப்பதம் குறைவாகவும், காற்று அதிகம் வீசும். இதனால், வெப்பம் அதிகரிக்கும் என வானிலை ஆய்வாளர்கள் கணித்துள்ளனர்.

அதே நேரத்தில், சென்னையை பொறுத்தவரை மழைக்கு வாய்ப்பு குறைவாக உள்ளதாகவும், மாலை மற்றும் இரவு நேரங்களில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் எனவும் அவர்கள் அறிவித்துள்ளனர்.

click me!