உஷார் மக்களே... நாளை தொடங்கும் முழு ஊரடங்கு... அரசின் கட்டுப்பாடுகள் என்ன ?

Published : Jan 08, 2022, 10:59 AM IST
உஷார் மக்களே... நாளை தொடங்கும் முழு ஊரடங்கு... அரசின் கட்டுப்பாடுகள் என்ன ?

சுருக்கம்

தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமையான நாளை முதல்  முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்றும் முதல்வர் அறிவித்துள்ள நிலையில், ஊரடங்கில் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் வெளிவந்துள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா மற்றும் ஒமைக்கிரான் தொற்று அதிகமாகி கொண்டிருக்கிறது. இந்தியாவில்,மகாராஷ்டிரா,மேற்கு வங்கம்,புது டெல்லி, கேரளா, கர்நாடகா போன்ற மாநிலங்களில் கொரோனா தொற்று குறைந்து மீண்டும் அதிகரிக்கத் துவங்கியுள்ளது.இதனைத் தொடர்ந்து மேற்கு வங்கம்,புது டெல்லி,கேரளா,கர்நாடகா மாநிலங்களில் வேகமாகப் பரவி வரும் கொரோனா நோயைக் கட்டுப்படுத்த பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

தமிழகத்திலும் கடந்த சில வாரங்களாக கொரோனா மற்றும் ஒமைக்ரான் பரவல் அதிகரித்து வருவதன் காரணமாக கடந்த ஜனவரி 6 ஆம் தேதி முதல் இரவு 10 மணியிலிருந்து அதிகாலை 5 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது.ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்றும் முதல்வர் மு.க ஸ்டாலின் அறிவித்துள்ளார். நாளை (9-1-2022) ஞாயிற்றுக்கிழமை அன்று முழு ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்படும். ஊரடங்கு நேரத்தில் என்னென்ன கட்டுப்பாடுகள் அமலில் இருக்கும் என்று இதில் பார்க்கலாம்.

அத்தியாவசியப் பணிகளான மருத்துவப் பணிகள், மருந்தகங்கள்,பால் விநியோகம்,ATM மையங்கள்,சரக்கு வாகனப் போக்குவரத்து மற்றும் பெட்ரோல் டீசல் பங்குகள் போன்றவை இயங்குவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பொதுப் போக்குவரத்து மற்றும் மெட்ரோ இரயில் ஆகியவை இயங்காது.

9-1-2022 அன்று முழு ஊரடங்கின் போது,உணவகங்களில் பார்சல் சேவை மட்டும் காலை 7.00 மணி முதல் இரவு 10.00 மணி வரை அனுமதிக்கப்படும். இதர மின் வணிக நிறுவனங்களுக்கு அனுமதி இல்லை.வார இறுதி நாட்களில்(வெள்ளி,சனி,ஞாயிறு ஆகிய கிழமைகளில்) கோயில்களில் வழிபாடு செய்ய அனுமதி இல்லை. அதன்படி,  நாளை பக்தர்கள் வழிபாட்டிற்கு தடை.

9-1-2022 மற்றும் வார நாட்களில் இரவு 10.00 மணி முதல் காலை 5.00 மணி வரை விமானம்,இரயில் மற்றும் பேருந்துகளில் பயணிப்பதற்காக விமானம்,இரயில் மற்றும் பேருந்து நிலையங்களுக்கு செல்ல சொந்த மற்றும் வாடகை வாகனங்களை பயன்படுத்திக் கொள்ள அனுமதிக்கப்படும்.அவ்வாறு பயணிக்கும் போது,பயணச்சீட்டு வைத்து கொள்ள வேண்டும்.

அரசு மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பணியாளர்கள் 9.1.2022-க்குள் கட்டாயம் தடுப்பூசி செலுத்தி,அதற்குண்டான சான்றினை தொடர்புடைய அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும். ஊரடங்கு காலத்தில் தொழிற்சாலைகளில் பணிபுரிபவர்கள் இரவு நேரப் பணிக்குச் செல்லும்போது அலுவலக அடையாள அட்டை மற்றும் தங்கள் தடுப்பூசி செலுத்திக் கொண்டமைக்கான சான்றிதழையும் வைத்துக்கொள்ள வேண்டும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

போலீஸ் கையைப் பிடித்து கடித்துக் குதறிய தவெக தொண்டர்.. வைரலாகும் விஜய் ரசிகரின் வெறித்தனம்!
அரசு பள்ளி மாணவர்களுக்கு தரமற்ற இலவச சைக்கிள்.. அண்ணாமலையின் பகீர் குற்றச்சாட்டு!