கொடைக்கானல் 'சுற்றுலா' போறீங்களா ? அப்போ இதை மறக்காம செஞ்சுடுங்க... இல்லைனா அனுமதி இல்லை..

By Raghupati R  |  First Published Jan 8, 2022, 6:38 AM IST

தமிழகம் முழுவதும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்ட நிலையில், கொடைக்கானலுக்கு வருவோருக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.


தமிழக சுகாதாரத்துறை நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,’வெளிநாடு மற்றும் அண்டை மாநிலங்களில் இருந்து தமிழகம் வந்தவர்கள் உட்பட 8,981 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 5,238 பேர் ஆண்கள், 3,743 பேர் பெண்கள். இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 27லட்சத்து 76 ஆயிரத்து 413 ஆக அதிகரித்துள்ளது. சிகிச்சை பெற்றுவருவோரின் எண்ணிக்கை 30ஆயிரத்து 817ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் 321 பரிசோதனை மையங்கள் உள்ளன.

Tap to resize

Latest Videos

undefined

இன்று 8 பேர் உயிரிழந்துள்ளார். 5 பேர் தனியார் மருத்துவமனைகளிலும், 3 பேர் அரசு மருத்துவமனைகளிலும் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 36 ஆயிரத்து 833 ஆக அதிகரித்துள்ளது. இன்று 984 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்த நிலையில் இதுவரை குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 27 லட்சத்து 08ஆயிரத்து 763 ஆக அதிகரித்துள்ளது’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் அதிகரித்து வரும் கொரோனா பரவலைத் தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. சுற்றுலாத்தலமான கொடைக்கானலுக்கு நாள்தோறும் ஏராளமான பயணிகள் வருகின்றனர். இங்குள்ள ஏரியில் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம், நகராட்சி ஆகியவை படகுகளை இயக்குகின்றன. நேற்று முதல் ஏரியில் படகு சவாரி செய்வோர் இருமுறை தடுப்பூசி செலுத்திய சான்றிதழ் வழங்க அறிவுறுத்தியுள்ளனர். சான்றிதழை சரிபார்த்தபின்பே, பயணிகள் படகு சவாரிக்கு அனுமதிக்கப்படுகின்றனர். இதுகுறித்து நுழைவாயிலில் நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது.

click me!