அலெர்ட் மக்களே..!! ரேஷன் கடைகளுக்கு 'விடுமுறை' அறிவிப்பு.. எந்த தேதியா இருக்கும் ?

By Raghupati RFirst Published Jan 8, 2022, 5:48 AM IST
Highlights

தமிழகம் முழுவதும் பொங்கலை முன்னிட்டு தமிழக அரசு ரேஷன் கடைகள் மூலம் பொங்கல் பரிசினை வழங்கி வருகிறது. இந்நிலையில் ரேஷன் கடைகளுக்கு விடுமுறை என்ற அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. 

தைப்பொங்கல் பண்டிகையை பொது மக்கள் வெகு விமரிசையாக கொண்டாடும் நோக்கில், 21 பொருட்கள் ரேஷன் கடைகள் மூலம் இலவசமாக வழங்கப்படும் என, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். அதன்படி, சுமார் 2.15 கோடி அரிசி குடும்ப அட்டைதாரர்கள், இலங்கை தமிழர் மறுவாழ்வு மையங்களில் வசிப்போர்களுக்கு 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது.

கரும்பு, பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை, ஏலக்காய், பாசிப்பருப்பு, நெய் போன்ற பொருட்களும், பண்டிகைக் கால சமையலுக்குத் தேவையான மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித் தூள், கடுகு, சீரகம், மிளகு, புளி, கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு, ரவை, கோதுமை மாவு, உப்பு ஆகிய மளிகைப் பொருட்களும் அடங்கிய துணிப்பை வழங்கப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்திற்காக 1,088 கோடி ரூபாய் செலவிடப்பட்டு உள்ளது.

டோக்கன் அடிப்படையில் நாளொன்றுக்கு 150 முதல் 200 பேர் வரை என, ரேஷன் கடைகளில் காலை 9 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை, பிற்பகல் 2 மணி முதல் மாலை 6 மணி வரை, பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. டோக்கன் வாங்கத் தவறியவர்கள் மற்றும் டோக்கனில் உள்ள தேதியில் பொருட்கள் வாங்க முடியாதவர்கள், வரும் 10 ஆம் தேதிக்கு மேல் பொங்கல் பரிசுத் தொகுப்பை பெற்றுக் கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக தமிழக அரசு வரும் ஞாயிறன்று முழு ஊரடங்கை அறிவித்துள்ளது. இந்நிலையில், அன்றைய தினம் ரேஷன் கடைகள் செயல்படாது என்றும், பொங்கல் பரிசுகள் அன்றைய தினம் வழங்கப்படாது என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது.

click me!