சென்னை மக்களே உஷார்... மதியம் 1 மணி வரை மட்டுமே இயங்கும்... கோயம்பேடு மார்க்கெட் !!

Published : Jan 08, 2022, 07:00 AM IST
சென்னை மக்களே உஷார்... மதியம் 1 மணி வரை மட்டுமே இயங்கும்... கோயம்பேடு மார்க்கெட் !!

சுருக்கம்

சென்னை, கோயம்பேடு மார்க்கெட் இன்று முதல் அதிகாலை 1 மணி முதல் பிற்பகல் 1 மணி வரையே இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா மற்றும் ஒமைக்ரான் தொற்று பாதிப்பு தமிழகத்தில் அதிகரித்து வருகிறது. கொரோனா மற்றும் ஒமைக்ரான் தொற்று பரவல் காரணமாக கடந்த ஜனவரி 6 ஆம் தேதி முதல் தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.மேலும், ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்படும் எனவும் தமிழக அரசு அறிவித்துள்ளது.

இந்த ஊரடங்கு நேரத்தில் அத்தியாவசிய பணிகளுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சென்னை கோயம்பேடு மார்க்கெட் இன்று முதல் அதிகாலை 1 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை மட்டுமே இயங்கும் என்றும்,தமிழக அரசின் கொரோனா தடுப்பு விதிகளின்படி மார்க்கெட் செயல்படுவதில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

மார்க்கெட்டிற்கு வரும் வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் கொரோனா விதிமுறைகளை முறையாக கடைப்பிடித்து வர வேண்டும் என்றும் வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. மேலும், ஜனவரி 9-ம் தேதி(நாளை) முழு முடக்கத்தை முன்னிட்டு கோயம்பேடு மார்க்கெட்டிற்கு விடுமுறை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

விஜயை விமர்சித்த கையோடு திமுகவில் இணைந்த ரஞ்சனா நாச்சியார்.. என்ன காரணம் தெரியுமா?
கூட்டணிக்கு 'எண்ட் கார்டு'.! தனித்து வேட்டை ஆடத் தயாராகும் தவெக!