நாளை கறிகடைகள் திறந்திருக்காது... சரக்கு கூட கிடைக்காது!! குடிமகன்கள் அதிர்ச்சி...

By sathish kFirst Published Jan 15, 2019, 7:50 PM IST
Highlights

நாளை திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு தமிழகம் முழுவதும் டாஸ்மாக், இறைச்சி கடைகள் அடைக்கப்படும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

நாளை மற்றும் நாளை மறுநாள் திருவள்ளுவர் தினம் உள்ளிட்ட முக்கிய தினங்களில் மதுபானக் கடைகள்,  மூடப்படுமாம்,  திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு, நாளை 16ஆம் தேதி ஆடு, மாடு, கோழி மற்றும் பன்றி போன்ற உயிரினங்களை வதை செய்யக்கூடாது. மேலும் கறிக் கடைகளையும் திறக்கக் கூடாது. இதை மீறி திறக்கப்படும் கடைகளில் கறிகள் பறிமுதல் செய்யப்படுவதுடன், சட்டப்பூர்வ நடவடிக்கையும் எடுக்கப்படும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழ்நாடு மதுபானம் சில்லறை விற்பனை (கடைகள் மற்றும் பார்கள்) விதிகள் 2003, விதி 12-ன் படி மற்றும் தமிழ்நாடு மதுபானம் (உரிமம் மற்றும் அனுமதி) விதிகளின் கீழ் சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனை கடைகள் மற்றும் அதனை சார்ந்த பார்கள், எப்.எல்.2 உரிமம் கொண்ட கிளப்புகளை சார்ந்த பார்கள் மற்றும் எப்.எல்.3 உரிமம் கொண்ட ஓட்டல்களை சார்ந்த பார்கள் மற்றும் எப்.எல்.3 (ஏ) உரிமம் கொண்ட பார்கள் அனைத்தும் கண்டிப்பாக மூடப்பட்டு இருக்க வேண்டும்.

மேலும்,  நாளைய தினத்தில் மதுபானம் விற்பனை செய்யக்கூடாது. தவறினால், மதுபான விதிமுறைகளின் படி, சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இடஙக திடீர் அறிவிப்பால், குடிமகன்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

click me!