‘சயான், மனோஜ் கைது அல்ல, கடத்தல்’... தெஹல்கா ஆசிரியர் மேத்யூ சாமுவேல் கொந்தளிப்பு..!

By Asianet TamilFirst Published Jan 14, 2019, 12:12 PM IST
Highlights

கோடநாடு எஸ்டேட் விவகாரத்தில் சயான், மனோஜ் ஆகியோர் கைது செய்யப்பட்டதை ‘கடத்தல்’ என்று தெஹல்கா பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் மேத்யூ சாமுவேல் கடுமையாகக் கண்டித்துள்ளார்.

கோடநாடு எஸ்டேட் விவகாரத்தில் சயான், மனோஜ் ஆகியோர் கைது செய்யப்பட்டதை ‘கடத்தல்’ என்று தெஹல்கா பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் மேத்யூ சாமுவேல் கடுமையாகக் கண்டித்துள்ளார்.

தெஹல்ஹா முன்னாள் ஆசிரியர் சில தினங்களுக்கு முன்பு டெல்லியில் வீடியோ ஒன்றை வெளியிட்டார். கோட நாடு எஸ்டேட் கொள்ளையில் தொடர்புடைய 5 பேர் மரணம் சந்தேகத்தை ஏற்படுத்துவதாக அந்த வீடியோவில் சாமுவேல் கூறியிருந்தார். அந்த வீடியோவில் சயான் மற்றும் வாளையார் மனோஜ் ஆகியோரின் பேட்டியையும் வெளியிட்டிருந்தார். முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மீதும் புகார் கூறியிருந்தார்கள். இந்த விவகாரம் தமிழக அரசியலில் புயலை கிளப்பியது. 

இதுதொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்று  தி.மு.க, அ.ம.மு.க உள்ளிட்ட கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. ஆனால், இந்தக் குற்றச்சாட்டுகள் அனைத்தையும் மறுத்த எடப்பாடி பழனிசாமி, இதுதொடர்பாக சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார். இந்த விவகாரம் தொடர்பாக மேத்யூ சாமுவேல் உள்ளிட்டவர்கள் மீது மத்தியக் குற்றப்பிரிவு போலீஸ் வழக்குப் பதிவு செய்தது. மேத்யூவைக் கைது செய்ய தனிப்படை போலீஸ் டெல்லியில் முகாமிட்டது. 

இந்நிலையில் டெல்லியில் சயான் மற்றும் மனோஜ் ஆகியோரை தனிப்படை போலீஸார் கைது செய்தனர். அவர்களை சென்னைக்கு அழைத்து வந்துவிட்ட போலீஸார், விசாரணையைத் தீவிரப்படுத்த  உள்ளனர். சயானும் மனோஜும் கைது செய்யப்பட்டது தொடர்பாக தெஹல்கா முன்னாள் ஆசிரியர் வீடியோ சாமுவேல் நேற்று இரவு வீடியோ ஒன்றை வெளியிட்டார். 

அந்த வீடியோவில், “டெல்லியில் உள்ள துவாராகவில் நான், சயான், மனோஜ், சிவானி பேசிக்கொண்டிருந்தோம். அங்கிருந்து வெளியேறும்போது, ஒரு வண்டியில் வந்த போலீஸார், சயானையும் மனோஜையும் வலுக்கட்டயமாக வண்டியில் இழுத்துச்சென்றனர். போலீஸ் என்ற ஸ்டிக்கர் அந்த வண்டியில் ஒட்டப்பட்டிருந்தது. இது கைது அல்ல கடத்தல். இருவரையும் எப்படிக் கடத்தி செல்லலாம்? இதற்கு தமிழ்க முதல்வர் எடப்பாடி பழனிசாமிதான் பொறுப்பு. இந்த விஷயம் தொடர்பாக நாம் கேள்வி எழுப்ப வேண்டும். இது முக்கியமான பிரச்னை” என்று தெரிவித்துள்ளார்.

click me!