
இரயில்வே சுரங்க பாதை அமைக்கும் பணி நடைபெற இருப்பதால் திருச்சி செல்லும் பயணிகள் இரயில் நாளை இரத்து செய்யப்படுகிறது.
திருச்சி அருகே குமாரமங்கலம் – கீரனூர் இடையே இரயில்வே சுரங்க பாதை அமைக்கும் பணி சனிக்கிழமை நடைபெற இருக்கிறது.
இதையொட்டி காரைக்குடி – திருச்சி பயணிகள் இரயில், திருச்சி – மானாமதுரை பயணிகள் இரயில், மானாமதுரை – திருச்சி பயணிகள் இரயில் நாளை ஒரு நாள் இரத்து செய்யப்படுகிறது.
காரைக்குடி – திருச்சி பயணிகள் இரயில் காரைக்குடியில் இருந்து தாமதமாக மாலை 5.50 மணிக்கு புறப்பட்டு திருச்சிக்கு இரவு 8.10 மணிக்கு வந்து சேரும்.
புவனேஸ்வர் – இராமேசுவரம் எக்ஸ்பிரஸ் இரயில் திருச்சியில் நிறுத்தி வைக்கப்பட்டு இயக்கப்படும்.
திருச்சி – காரைக்குடி பயணிகள் இரயில் திருச்சியில் இருந்து மாலை 6.15 மணிக்கு புறப்படுவதற்கு பதிலாக இரவு 7.20 மணி அளவில் புறப்படும்” என்று திருச்சி கோட்ட இரயில்வே நிர்வாகம் தெரிவித்தது.