Tomato Price : தக்காளி 1 கிலோ ரூ.120..அடேங்கப்பா! இல்லத்தரசிகள் அதிர்ச்சி..மறுபடியுமா ?

By Raghupati R  |  First Published May 21, 2022, 9:54 AM IST

Tomato Price : சென்னையில் கடந்த மாதம் ஒரு கிலோ 5, ரூபாய்க்கு கூவி கூவி விற்கப்பட்ட தக்காளி மளமளவென விலை உயர்ந்தது. 


ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்ய தொடங்கியுள்ளது. இதனால் வெளிமாநிலங்களில் இருந்து தமிழ்நாட்டிற்கு வரும் தக்காளி வரத்து குறைந்துள்ளது. சென்னையின் தக்காளி தேவையை பூர்த்தி செய்ய தமிழகத்தின் கிருஷ்ணகிரி, ராயகோட்டை, கர்நாடகா , மற்றும் ஆந்திராவிலிருந்து உள்ளிட்ட வடமாநிலங்களிலிருந்து தக்காளி வரும் வழக்கமாக சென்னையின் தக்காளி தேவையை பூர்த்திசெய்ய நாளொன்றுக்கு 1000டன் அளவு வரத்து வந்து கொண்டிருந்தது.

இந்நிலையில். கோடைக்கால விளைச்சல் குறைந்த நிலையில் தக்காளி வரத்து குறைந்து 500 டன் தக்காளி மட்டுமே வந்துள்ளதாக வியாபாரிகள் கூறியுள்ளனர். எல்லா வகை உணவிலும் தவிர்க்க முடியாத ஒன்றாக திகழும் தக்காளியின் இந்த விலை உயர்வு வீடுகளின் உணவுக்கான பட்ஜெட்டையே பதம் பார்த்திருக்கிறது. இந்திய அளவில் தக்காளி உற்பத்தியில் தமிழ்நாடு 4 வது இடத்தில் உள்ளது. ஆண்டுக்கு 15.92 லட்சம் டன் தக்காளியை 52,898 ஹெக்டேர் பரப்பளவு நிலத்தில் தமிழ்நாடு உற்பத்தி செய்து வருகிறது. 

Tap to resize

Latest Videos

17,527 டன் தக்காளியை தமிழ்நாட்டில் குளிர்சாதன சேமிப்புக் கூடங்களில் வைக்கலாம். இந்நிலையில், பண்ணை பசுமை கடைகளில் குறைந்த விலையில் தக்காளி விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார். மழை காரணமாக தக்காளி வரத்து குறைந்து, விலை அதிகரித்து கிலோ ரூ.90 முதல் ரூ.120 வரை வெளிச்சந்தையில் விற்பனை செய்யப்படுகிறது.

மொத்த விற்பனையில் ஒரு கிலோ தக்காளி 100 ரூபாயை தொடும் அளவிற்கு உயர்ந்துள்ளது. இதே தக்காளி சில்லரை விற்பனையில் 110 முதல் 120 வரை விற்பனையாகிறது. இதனால் இல்லத்தரசிகள் தக்காளி வாங்குவதற்கு தயக்ககம் காட்டிவருவதால் விற்பனை மந்தமான நிலையில் உள்ளாதாக மொத்த வியாபாரிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க : மதுபானங்களின் விலை அதிரடி உயர்வு.! குவாட்டர் ரூ.20..பீர் ரூ.10 குடிமகன்கள் ஷாக் !!

இதையும் படிங்க : Ration Card : உடனே இதை செய்யுங்க.. அப்படியில்லை உங்க 'ரேஷன் கார்டு' செல்லாது !

click me!