தக்காளி விலை எப்ப தான் குறையும்..! மீண்டும் உச்சம் தொட்ட தக்காளி..!

By Thanalakshmi VFirst Published Dec 5, 2021, 2:33 PM IST
Highlights

வரத்து குறைந்ததால் சென்னை கோயம்பேடு காய்கறி மார்க்கேட்டில் மீண்டும் ஒரு கிலோ தக்காளின் விலை 100 ரூபாய்க்கு விற்பனை செய்யபடுகிறது. 
 

ஆந்திரா, கர்நாடகா, தழிகத்தில் பெய்த தொடர் கன மழை காரணமாக, விளைச்சல் பாதிக்கபட்டு தக்காளில் விலை உயர்ந்துள்ளது. மேலும்  கடந்த வாரங்களில், தக்காளி வரத்து குறைவினால், சில்லறை விற்பனையில் ஒரு கிலோ 160 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில் மகாராஷ்டிரா மாநிலத்தில் இருந்து 10 லாரிகளில் தக்காளி வந்ததால், கிலோ 40 ரூபாய் வரை குறைந்து விற்பனையானது. மேலும் மகாராஷ்டிராவில் இருந்து வரும் லாரிகளுக்கு போக்குவரத்து செலவுகள் கட்டுபிடி ஆகாததால், 4 வது நாளாக லாரிகள் வரவில்லை என்று சொல்லபடுகிறது. இதன் காரணமாகவே தக்காளில் விலை மீண்டும் உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். 

ஆந்திரா, கர்நாடகா, கிருஷ்ணகிரி உள்ளிட்ட பகுதிகளிலிருந்து சந்தைகளுக்கு தற்போது 40முதல் 50வாகனங்களில் மட்டுமே தக்காளி வருவதால் விலை அதிகரித்துள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். கோயம்பேடு சந்தையில், நேற்று 70ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோ நாட்டுத் தக்காளி, தற்போது 80ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. 80ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோ நவீன தக்காளி 90 ரூபாயாக அதிகரித்துள்ளது. சில்லறை விலையில் ஒரு கிலோ நாட்டுத் தக்காளி 100 ரூபாய்க்கும், நவீன தக்காளி 100 முதல் 110ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது

கடந்த வாரங்களில் தக்காளி உயர்வை கட்டுபடுத்த, தமிழக அரசு சார்பில் பசுமை பண்ணை நுகர்வோர் கடைகளில் குறைந்த விலையில் தக்காளி உள்ளிட்ட காய்கறிகள் விற்பனை செய்யப்பட்டன. குறிப்பாக, வெளி சந்தையில் ஒரு கிலோ தக்காளி ரூ.150 வரை விற்பனை செய்யப்பட்ட நிலையில், பசுமை பண்ணைகளில் கிலோ தக்காளி ரூ.80 விற்பனை செய்யப்பட்டது. இதனால் மக்கள், பசுமை பண்ணை கடைகளை நோக்கி படையெடுத்தனர். 

இதனையடுத்து, தக்காளி விலை உயர்வை கட்டுபடுத்த, நியாய விலைக்கடைகளிலும் தக்காளி விற்பனை செய்யப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது. அதன்  அடிப்படையில் நகர்புற மற்றும் அதனை சுற்றியுள்ள குறிப்பிட்ட நியாயவிலை கடைகளில் தக்காளி உள்ளிட்ட காய்கறிகள் விற்பனை செய்யப்பட்டது. அதற்கான விலை பட்டியலும் வெளியிடப்பட்டது.

மழைப்பொழிவு சற்று குறைந்த நிலையில், தக்காளி வரத்து அதிகரிப்பின் காரணமாக உயர்ந்த தக்காளியின் விலை மீண்டும் கட்டுக்குள் வந்தது. குறிப்பாக, ஒரு கிலோ தக்காளி ரூ.40 க்கு விற்பனையானது. இந்நிலையில் தற்போது மீண்டும் தக்காளி விலை அதிகரித்துள்ளது. ஆந்திரா, கர்நாடகா ஆகிய பகுதிகளில் தொடர்ந்து மழை நீடிப்பதால், வரத்து குறைந்துள்ளது. இதனால் தக்காளி மீண்டும் 100 ரூபாய் விற்பனை செய்யபடுகிறது. கடந்த சில தினங்களாக விலை உயர்ந்து காணப்படும் தக்காளி, காய்கறிகளின் விலையேற்றத்தை கட்டுபடுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

click me!