
சுங்கசாவடிகளில் கட்டண உயர்வு அதிரடியாக உயர்த்தப்பட்டு உள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. குறிப்பாக, சேலம், மதுரை, ஆந்திரா போன்ற பகுதிகளுக்கு செல்லும் சாலைகள் சென்னையுடன் இணையும் 14 சுங்கச் சாவடிகளில் கட்டணம் 10 % உயர்த்தப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இது குறித்த அறிவிப்பு இன்னும் இரண்டு நாட்களில் அதிகார பூர்வ தகவல் வெளிவர உள்ளது. மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சகம் இன்னும் இரண்டு நாட்களில் புதிய கட்டணம் குறித்த அறிவிப்பை வெளியிட உள்ளது.
கனரக வாகனங்களுக்கு - 6 % கட்டணம் உயர்வு இருக்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
ஏற்கனவே, சென்னையிலிருந்து பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் சுங்க சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்பட்டு பல்வேறு தரப்பினர் இடையே எதிர்ப்பை பெற்று, இந்நிலையில் மீண்டும் தற்போது சுங்கசாவடிகளின் கட்டணம் உயர்த்தப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தகவல் பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது.