
16 ஐபிஎஸ் அதிகாரிகளை அதிரடியாக இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதில் ஐஜி மீது புகார் கூறிய பெண் அதிகாரி ஜெயலட்சுமியும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
விவரம்;
* சமூகநீதி மனித உரிமைகள் ஏடிஜிபியாக சைலேஷ்குமார் யாதவ் நியமனம்.
* சென்னை கூடுதல் ஆணையர் சாரங்கன், குற்ற ஆவண ஐ.ஜி.யாக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
* தமிழ்நாடு காவல் போக்குவரத்துக் கழக ஏடிஜிபியாக அருணாச்சலம் நியமிக்கப்பட்டுள்ளார்.
* சேலம் குற்றப்பிரிவு துணை ஆணையர் தங்கத்துரை, சட்டம், ஒழுங்குக்கு மாற்றப்பட்டுள்ளார்.
* சேலம் சட்டம், ஒழுங்கு ஆணையர் சுப்புலட்சுமி சென்னைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
* சென்னை வடக்கு மண்டல ஐ.ஜி.நாகராஜன் நியமிக்கப்பட்டுள்ளார்.
* சென்னை குற்றப்பிரிவு சிஐடி ஐ.ஜி. சி.ஸ்ரீதர் நியமனம்.
* சென்னை பெருநகர சட்டம்-ஒழுங்கு(தெற்கு) கூடுதல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
* மனித உரிமை உதவி ஐ.ஜி. விஜயலட்சுமி சென்னை கமாண்டோ படைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
* சென்னை பெருநகர சட்டம்-ஒழுங்கு(வடக்கு) கூடுதல் ஆணையர் ஆர்.தினகரன் நியமனம்.
* ஊழல் ஒழித்துறை எஸ்.பி.ஜெயலட்சுமி, வர்த்தக குற்ற விசாரணைப் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார்.
* வடக்கு மண்டல ஐஜியாக நாகராஜன் நியமனம்
* சியாமளா தேவி - சேலம் குற்றம் மற்றும் போக்குவரத்து பிரிவு துணை ஆணையராக நியமனம்.
* வந்திதாபாண்டே - மத்திய விசாரணை பிரிவு, எஸ்பியாக நியமனம்.
* வெண்மதி- தமிழக போலீஸ் சிறப்பு படை கமாண்டோ படையில் நியமனம்.
* சுமித் சரண் - அமலாக்கத்துறை ஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார்.