
சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 30 காசுகள் குறைந்து 66 ரூபாய் 15 காசுகளும், , டீசல் விலை லிட்டருக்கு 16 காசுகள் குறைந்து 56 ரூபாய் 47 காசும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
பெட்ரோல் ,டீசல் விலையை பன்னாட்டு சந்தை விலைக்கு ஏற்ப அவ்வப்போது எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வந்தன. பின்னர் 15 நாட்களுக்கு ஒரு முறை பெட்ரோல் டீசல் விலையை, எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்தன.
இதையடுத்து ஒவ்வொரு நாளும் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயிக்கும் நடைமுறையை கொண்டுவர எண்ணெய் நிறுவனங்கள் திட்டமிட்டன.
இதையடுத்து கடந்த 16 ஆம் தேதி முதல் இந்த நடைமுறையை எண்ணெய் நிறுவனங்கள் அமல்படுத்தியுள்ளன.
அதன்படி சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 30 காசுகள் குறைந்து 66 ரூபாய் 15 காசுகளுக்கும், , டீசல் விலை லிட்டருக்கு 16 காசுகள் குறைந்து 56 ரூபாய் 47 காசுகளுக்கும் விற்பனை செய்யப்படுகிறது. இன்று காலை 6 மணி முதல் இந்த புதிய விலை அமல்படுத்தப்பட்டுள்ளது.