
சிறகுடைய பிராணிகள் என்றால் அது பறவைகள் தான். நமது கட்டை விரல் பருமனில் உள்ள டகங்காரப் பறவை முதல் குதிரை அளவு கொண்ட நெருப்பு கோழி வரை இந்தியாவில் மொத்தம் 1, 263 பறவை இனங்கள் உள்ளதாக ஆய்வறிக்கைகள் தெரிவித்துள்ளது.
பறவைகளை அக்காலத்தில் இருந்து வலசை என்று அழைப்பார்கள். வலசை என்றால் இடம் விட்டு இடம் பெயருவது என்று பொருள். தமிழகத்தில் 520 பறவை இனங்கள் உள்ளது. அவற்றில் 160 பறவைகள் வலசை இனத்தை சேர்ந்தவைகள். பறவைகள் வலசை வர வேண்டும் எனில் அதன் உடலில் ஒரளவுக்கு கொழுப்புக்களை சேர்த்து வைத்த பின்னர்தான் அவைகள் பறக்கவே ஆரம்பிக்கிறதாம். ஒரு சில வகைகள் ஒத்திகை பார்த்த பின்னர் தான் வலசையில் ஈடுபடுகிறதாம்.
பறவைகள் பெரும்பாலும் வலசையில் ஈடுபடுவதற்கு முக்கிய காரணம் அவைகளுக்கு போதிய உணவு கிடைக்காததால் என்று ஆய்வறிக்கைகள் கூறுகின்றன.
நமது கண்ணில் படும் வாலாட்டுக்குருவி ஒவ்வெரு வருடமும் ரஷ்யாவிற்கு சென்று வருமாம். ஆண்டாண்டு காலமாக குளிர்காலத்தில் ஒரு குறிப்பிட்ட பகுதிக்கு பறவைகள் இடம்மாறி மீண்டும் அப்பகுதிக்கே வருவது சூரியன் நட்சத்திரங்கள் காந்தப்புலங்கள் மற்றும் நிலம்பரப்பின் பெரும் அடையாளம் போன்றவற்றில் தான் என்றும் ஆய்வறிக்கைகள் கூறுகின்றன.
வரித்தலை வாத்துமங்கோலியாவிலிருந்து 21, 120 அடி உயமுடைய இமயமலையை கடந்து 8 ஆயிரம் கிலோமீட்டர் தொலைவினை இரண்டு மாத காலத்தில் பறந்து கூந்தங்குள்ளத்தை வந்தடைகிறதாம்.
வாத்துக்களை விட சிறிய அளவில் உள்ள வாலாட்டி மற்றும் உள்ளான் இனப்பறவைகள் மத்திய ஆசியா மற்றும் ரஷ்யாவில் இருந்து பல்லாயிரகணக்கான கிலோமீட்டர் தொலைவு கடந்து குளிர் காலத்தில் இந்தியாவிற்கு வருகின்றனவாம்.
குளிர்காலத்தில் வலசை வரும் பறவைகள் நம் நாட்டில் ஜீலைமாத இறுதியில் வருகின்றன. அவற்றில் பெரும்பாலனவைகள் செப்டம்பர் அக்டோபர் மாதங்களில் வந்து மார்ச் மாதத்தில் திரும்ப செல்கின்றன.
வெளிநாட்டில் இருந்து இந்தியாவிற்கு வரும் பறவைகள் இங்கு இனப்பெருக்கம் செய்வதில்லை. நம் நாட்டு பறவைகள் மட்டும் தான் இங்கு இனப்பெருக்கம் செய்கின்றன.
பறவைகள் வயலில் உள்ள பூச்சிகள் மற்றும் புழுக்களை உண்னும் போதும் அதன் எச்சம் நீரில் படும் போதும் விளைச்சல் அதிகரிக்கிறது. அதேபோல் விளை நிலங்களை சேதப்படும் பூச்சிகளையும் அவைகள் கொன்று விடுகின்றன.
நன்மை பயக்கும் பறவை இனத்தை நாம் வேட்டையாடுதல் மற்றும் ரசாயண மருந்து பொருட்கள் கொண்டு அழித்து வருகிறோம். இனிமேலாவது பறவை இனத்தை அழிக்காமல் பாதுகாப்போம் என்று உறுதி கொள்வோம்.