“ஹை டெக்”கா யோசிச்சு விளம்பரம் கொடுக்குகிறாங்க.. மொய் பணம் வசூலிக்க நிறுவனங்கள் : உடனடி பில், சி.டி.வசதி, கள்ளநோட்டு கண்டுபிடிப்பு

 
Published : May 09, 2017, 04:17 PM ISTUpdated : Sep 19, 2018, 03:15 AM IST
“ஹை டெக்”கா யோசிச்சு விளம்பரம் கொடுக்குகிறாங்க.. மொய் பணம் வசூலிக்க நிறுவனங்கள் : உடனடி பில், சி.டி.வசதி, கள்ளநோட்டு கண்டுபிடிப்பு

சுருக்கம்

brands for gift collecting in marriages

காலங்கள் மாறும் போது அதற்கு ஏற்றால்போல் நம்மையும், தொழிலையும் மாற்றிக்கொண்டால்தான் உலகில் நிலைத்து வாழ முடியும் என்பதற்கு மதுரை மாவட்டம், திருமங்கலம் தாலுகாவில் உள்ள செக்கானுரணியில் செய்யப்பட்டுள்ள விளம்பரமே சாட்சி. “மொய்டெக்” என்ற பெயரில் மொய் வசூலிப்பு நிறுவனம் தொடங்கப்பட்டுள்ளது.

விஷேச வீடுகளில் மொய் எழுத வேண்டும் என்றால், பேனா, நோட்டு, சில்வர் அல்லது பித்தளை குடத்தில் மஞ்சள் துணியைக்கட்டி வைப்பார்கள். அதில் மொய் செய்வோர் பணத்தையும், பெயரையும் கூறியபின், பணத்தை பெற்று அந்த பாணைக்குள் மொய் எழுதுபவர்கள் போடுவார்கள். ஆனால், இதுதான் கிராமங்களில் காலம் காலமாக பின்பற்றப்பட்டுவரும் முறையாகும்.

ஆனால், இந்த பழமையான முறையை கிராமத்தினர்களே உடைத்து எறிந்து அடுத்த கட்டத்துக்கு தங்களை நகர்த்தியுள்ளார்கள். ஆம், மொய் வசூலிப்பில் ஹை-டெக்காக புதிய நிறுவனத்தை தொடங்கி இருக்கிறார்கள்.

மொய் எழுதும் போது, மணமகள் மணமகன் வீட்டாரில் யாராவது ஒருவர் இருக்க வேண்டும். அதைக்காட்டிலும் கடைசியில் கணக்கு பார்க்கும் போது சில நேரங்களில் “திகட்டல்” வரலாம்.

 ஆனால், இந்த மொய் வசூலிக்கும் நிறுவனத்திடம் பொறுப்பை ஒப்படைத்துவிட்டால், அனைத்தும் ஹைக் டெக் முறையில் செய்கிறார்கள். மொய் வசூலிப்பு கணினிமுறைதான். மொய் எழுதிவிட்டால், உடனடி மொய் செய்தவருக்கு ரசிது, கடைசியில் கணக்கு முடித்துவிட்டு, அதை சி.டி.யில், அல்லது “பென் டிரை”விலும் பதிவேற்றி கொடுத்துவிடுகிறார்கள்.

இந்த நிறுவனத்தை விஷேச நாட்களுக்கு வாடக்கைக்கு அமர்த்திவிட்டால், மொய் பணம் செய்பவர்களுக்கு உடனடி ரசீது, கணினி வழியில் மொய்ப்பணம் வசூலித்து தரப்படுகிறது.

அதுமட்டுமல்லாமல், மொய் பணம் செய்பவர்கள் கொண்டு வரும் ரூபாய் நோட்டு கள்ளநோட்டா என்பதை கண்டறியும் எந்திரம், துல்லியமான கணக்கீடு, யார், எந்த ஊரைச் சேர்ந்தவர்கள் மொய் செய்துள்ளார்கள் என்பதை தனித்தனியாக பிரித்து பைன்டிங் செய்வது, மொய் யார் செய்துள்ளார்கள் என்பதை ஸ்மார்ட்போனில் பார்்க்கும் வசதி என சேவைகளை வழங்குறார்கள்.

விஷேசங்களில் மொய் எழுதியவர்கள் குறித்து சில ஆண்டுகளுக்கு பின் பார்க்க வேண்டுமானால், கூட தங்களுக்கு ஒதுக்கப்பட்டு இருக்கும் எண்ணைக் கூறினால், நிறுவனத்திடம் இருக்கும் மொய்ப்பட்டியல் பிரிண்ட் எடுத்து தரப்படும், அல்லது சி.டி.யாக மாற்றித்தரப்படும்.

மேலும், புதிதாக மொய் செய்வர்கள், ஏற்கனவே மொய் செய்தவர்கள் என பிரித்து பட்டியல் இடப்படும் என தெரிவிக்கிறார்கள்.  மொய் வாங்குவதில் இருக்கும் அனைத்து விசயங்களையும் நவீன ஹை-டெக் முறையில் செய்யப்படும் என விளம்பரம் செய்துள்ளார்கள்.

PREV
click me!

Recommended Stories

தமிழகத்தில் 24 ரயில்களின் எண்கள் மாற்றம்.. பயணிகளே நோட் பண்ணிக்கோங்க! முக்கிய அறிவிப்பு!
தூய்மை பணியாளர்களுக்கு இனி கவலையே இல்ல.. 200 வார்டிலும் வருது சூப்பர் ஓய்வறைகள்!