
கூவாகத்தில் நடைபெற்ற தாலி கட்டும் நிகழ்ச்சியில் ஏராளமான திருநங்கைகள கலந்து கொண்டனர்.
விழுப்புரம் மாவட்டம் கூவாகம் கிராமத்தில் கூத்தாண்டவர் கோயில் உள்ளது. இந்த கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதம் 18 நாட்கள் திருவிழா வெகு விமர்சையாக நடைபெறுவது வழக்கம்.
இந்த ஆண்டுக்கான சித்திரை திருவிழா கடந்த மாதம் 25 தொடங்கியது. அதன் ஒருபகுதியாக இன்று சாமி கண் திறத்தல் நிகழ்ச்சி நடைபெற்றது.
அப்போது, திருநங்கைகள், அரவானை மணமகனாக பாவித்து தங்களை மணமகள் போல் அலங்கரித்து கோயில் பூசாரி கையால் தாலி கொள்வது வழக்கம்.
அதேபோல் இன்று தாலி கட்டும் நிகழ்ச்சி துவங்கியது. அரவான் களப்பலி முடிந்ததும் திருநங்கைகள் தாலியை அறுத்து விட்டு கிணற்றில் குளித்து விட்டு வெள்ளை சேலை அணிந்து சோகமாக ஊருக்கு திரும்புவார்கள்.
இதை தொடர்ந்து நாளை சித்திரை தேரோட்டம் நடைபெற உள்ளது. இந்த திருவிழாவில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் மற்றும் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் திருநங்கைகள் கலந்து கொண்டனர்.
சினிமா நடிகைகளையே மிஞ்சும் அளவிற்கு விதவிதமான சேலைகள் அணிந்து தக தகவென மின்னிக்கொண்டு ஒய்யாரமாக வலம் வருகின்றனர்.