சென்னையில் இன்று பள்ளிகள் வழக்கம் போல் இயங்கும் !! ஒரு வாரத்துக்குப் பின் திறக்கப்படுவதால் மாணவர்கள் மகிழ்ச்சி !!!

First Published Nov 7, 2017, 6:30 AM IST
Highlights
school reopen


சென்னையில் இன்று பள்ளிகள் வழக்கம் போல் இயங்கும் !! ஒரு வாரத்துக்குப் பின் திறக்கபபடுவதால் மாணவர்கள் மகிழ்ச்சி !!!

தொடர் கனமழையால் சென்னை, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளுர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகள் கடந்த ஒரு வாரமாக மூடப்பட்டிருந்த நிலையில் இன்று வழக்கம்போல் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வட கிழக்கு பருவமழை கடந்த மாதம் 28 ஆம் தேதி தொடங்கியது. இதையடுத்து சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், நாகை, கடலூர்,திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்தது.

ஒரு வாரமாக தொடர்ந்து மழை பெய்ததால் இந்த மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் மழை குறைந்து வழக்கமான சூழ்நிலை நிலவுவதால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள பள்ளிகள் இன்று முதல் வழக்கம்போல் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையைப் பொறுத்தவரை புரசைவாக்கம் பாலர் கல்வி நிலைய தொடக்கப்பள்ளி, தியாகராயநகர் பாலமந்திர் தொடக்கப்பள்ளி மற்றும் ஏ.எம்.சி. தொடக்கப்பள்ளி, ராயபுரம் கலைமகள் வித்யாலயா, வெப்பேரி டவுட்டன் ஆங்கிலோ இந்திய பெண்கள் மற்றும் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, ராயபுரம் தியாகராய மேல்நிலைப்பள்ளி, வேளச்சேரி அரசு மேல்நிலைப்பள்ளி, திருவல்லிக்கேணி லேடி வெலிங்டன்  பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஆகிய 9 பள்ளிகளைத் தவிர மற்ற பள்ளிகள் அனைத்தும் இன்றுமுதல் வழக்கம்போல் இயங்கும் என சென்னை மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

இதே போல் திருவள்ளூர் மாவட்டத்தில் 12 பள்ளிகள் தவிர மற்ற பள்ளிகளும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஒரு சில பள்ளிகளைத் தவிர மற்ற பள்ளிகளும் இன்று வழக்கம் போல் செயல்படும் என அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர்.

ஒரு சில பள்ளிகளில் உள்ள வளாகங்களில் தண்ணீர் தேங்கியுள்ளதால் அவை அகற்றப்பட்டு பின்னர் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

திருவாரூரில்  13 பள்ளிகளைத் தவிர  மற்ற பள்ளிகள் அனைத்தும்  இன்று   திறக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

7 நாட்களுக்குப் பின்னர் பள்ளிகள் திறக்கப்படுவதால் மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

click me!