வங்கி ஊழியர்கள் மேல் நடவடிக்கை எடுக்கப்படும் - விவசாயி உடல் உறவினர்களிடம் ஒப்படைப்பு...!

First Published Nov 6, 2017, 9:00 PM IST
Highlights
SB said that bank employees will be taken over. After pledging the farmer is entrusted with the relatives of Gnanasekara.


வங்கி ஊழியர்கள் மேல் நடவடிக்கை எடுக்கப்படும் என எஸ்.பி. உறுதியளித்தபின் விவசாயி ஞானசேகரன் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. 

திருவண்ணாமலை அருகே சாத்தனூரை சேர்ந்த ஞானசேகரன் என்பவர் வங்கியில் கடன் வாங்கியுள்ளார். நீண்ட நாட்கள் ஆகியும் அவர் வங்கி கடனை திருப்பி செலுத்தவில்லை என தெரிகிறது. 

இந்நிலையில், கடனை வசூலிக்க வந்த வங்கி ஊழியர்கள் தாக்கியதில் விவசாயி ஞானசேகரனுக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது. 

இதையடுத்து அவர் நெஞ்சு வலியால் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி ஞானசேகரன் உயிரிழந்தார். 

இதைதொடர்ந்து உறவினர்கள் உயிரிழந்தவரின் உடலை வாங்க மறுப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். 

இதனால் விவசாயி குடும்பத்தாருடன் ஆட்சியர் மற்றும் காவல்துறை எஸ்.பி. உள்ளிட்டோர் பேச்சு வார்த்தை நடத்தினர். மேலும் வங்கி மேலாளர் மற்றும் ஊழியர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்படும் என்று எஸ்.பி. பகலவன் உறுதியளித்தார். 

சமாதான பேச்சுக்கு பின் ஞானசேகரின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. 

click me!