Tamilnadu Rains : மக்களே உஷார்..!! தமிழகத்தில் மழை வெளுத்து வாங்கப்போகுது !!

Published : Feb 25, 2022, 01:44 PM IST
Tamilnadu Rains : மக்களே உஷார்..!! தமிழகத்தில் மழை வெளுத்து வாங்கப்போகுது !!

சுருக்கம்

தமிழகத்தில் இன்று எந்தெந்த மாவட்டங்களில் மழை வரப்போகிறது என்று வானிலை ஆய்வு மையம் அறிக்கை வெளியிட்டு இருக்கிறது.

இது தொடர்பாக சென்னை வானிலை மையம் இயக்குனர் செந்தாமரை கண்ணன் வெளியிட்ட அறிவிப்பில் கூறியதாவது, ‘ குமரி கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் மழை பெய்யும்.

இன்று தென்தமிழக கடலோர மாவட்டங்கள், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இலேசான, மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவித்தார்.

 நாளை 26ம் தேதி தென் தமிழகம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இலோசனது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என தெரிவித்தார்.

மேலும், 27ம் தேதி தென்தமிழகம், நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இலேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னையை பொறுத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என தெரிவித்தார்.

PREV
click me!

Recommended Stories

நான் கூட்டணியில் இருந்து வெளியேற அண்ணாமலை தான் காரணம்..? டிடிவி தினகரன் பரபரப்பு விளக்கம்
விஜயை வைத்து பூச்சாண்டி..! வெறுப்பின் உச்சத்தில் ஸ்டாலின்..! காங்கிரஸை கழற்றிவிட திமுக அதிரடி முடிவு..!