சென்னையில் இன்று மழை.. நாளை மறுநாள் 11 மாவட்டங்களில் கனமழை.. வானிலை அப்டேட்

Published : Jun 27, 2022, 03:00 PM ISTUpdated : Jun 28, 2022, 10:10 AM IST
சென்னையில் இன்று மழை.. நாளை மறுநாள் 11 மாவட்டங்களில் கனமழை.. வானிலை அப்டேட்

சுருக்கம்

தமிழகத்தில் வரும் 29, 30 ஆகிய தேதிகளில் 11 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.அடுத்த 24 மணி நேரத்தில் சென்னையில் ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது  

இதுக்குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில்,” மேற்குஇசை காற்றின்‌ வேக மாறுபாடு காரணமாக,

27.06.2022: மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள்‌, கன்னியாகுமரி, திருநெல்வேலி, வடக்கு கடலோர தமிழக மாவட்டங்கள்‌ மற்றும்‌ அதனை ஓட்டிய மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌.

28.06.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஓரிரு இடங்களில்‌ லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌.

மேலும் படிக்க:பிளஸ் 1 துணைத்தேர்வுக்கு விண்ணப்பிக்கும் தேதி அறிவிப்பு.. தேர்வு எப்போது..? முழு தகவல்..

29.06.2022. 30.06.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஒரு சில இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. நீலகிரி, கோயம்புத்தூர்‌, திருப்பூர்‌, தேனி, திண்டுக்கல்‌, திருவண்ணாமலை,
ராணிப்பேட்டை, திருவள்ளூர்‌, காஞ்சிபுரம்‌, செங்கல்பட்டு, விழுப்புரம்‌ மாவட்டங்கள்‌ மற்றும்‌ புதுச்சேரியில்‌ ஓரிரு இடங்களில்‌ கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

01.07.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஒருசில இடங்களில்‌ லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்‌ கூடும்‌.

மேலும் படிக்க:பரபரப்பு !! பள்ளி மாணவர்களை ஏற்றி சென்ற ஆட்டோ கவிழ்ந்து விபத்து.. எல்.கே.ஜி மாணவன் உடல் நசுங்கி பலி..

சென்னையை பொறுத்தவரை:

அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம்‌ ஒரளவு மேகமூட்டத்துடன்‌ காணப்படும்‌. நகரின்‌ ஒரு சில பகுதிகளில்‌ லேசான மழை பெய்யக்கூடும்‌. அதிகபட்ச வெப்பநிலை 35-36 டிகிரி செல்சியஸ்‌ மற்றும்‌ குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸ்‌ அளவில்‌
இருக்கக்கூடும்‌.

அடுத்த 48 மணி நேரத்குற்கு வானம்‌ ஒரளவு மேகமூட்டத்துடன்‌ காணப்படும்‌. நகரின்‌ ஒருசில பகுதிகளில்‌ லேசான / மிதமான மழை பெய்யக்கூடும்‌. அதிகபட்ச வெப்பநிலை 35-36 டிகிரி செல்சியஸ்‌ மற்றும்‌ குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகரி
செல்சியஸ்‌ அளவில்‌ இருக்கக்கூடும்‌.

மேலும் படிக்க:tiruppur: நாடுமுழுவதும் 75 திருப்பூர் மாதிரிகள்: பியூஷ் கோயல் திட்டம்

மீனவர்களுக்கான எச்சரிக்கை :

27.06.2022, 28.06.2022: குமரிக்கடல்‌ பகுதி, மன்னார்‌ வளைகுடா, தென்‌ தமிழக கடலோரப்‌ பகுதிகள்‌ மற்றும்‌ அதனை ஓட்டிய தென்மேற்கு வங்க கடல்‌ பகுதிகளில்‌ பலத்தக்காற்று மணிக்கு 40 முதல்‌ 50 கிலோ மீட்டர்‌ வேகத்தில்‌ வீசக்கூடும்‌.

கர்நாடக கடலோரப்‌ பகுதிகள்‌ மற்றும்‌ அதனை ஓட்டிய மத்திய கிழக்கு அரபிக்கடல்‌ பகுதிகளில்‌ சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல்‌ 50 கிலோ மீட்டர்‌ வேகத்தில்‌ வீசக்கூடும்‌.

29.06.2022: குமரிக்கடல்‌ பகுதி, மன்னார்‌ வளைகுடா, தென்‌ தமிழக கடலோரப்‌ பகுதிகள்‌
மற்றும்‌ அதனை ஓட்டிய தென்மேற்கு வங்க கடல்‌ பகுதிகளில்‌ பலத்தக்காற்று மணிக்கு 40 முதல்‌ 50 கிலோ மீட்டர்‌ வேகத்தில்‌ வீசக்கூடும்‌.

இலட்சத்தீவு பகுதி, கேரளா மற்றும்‌ அதனை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல்‌, கர்நாடகா மற்றும்‌ அதனை ஓட்டிய மத்திய கிழக்கு அரபிக்கடல்‌ பகுதிகளில்‌ சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல்‌ 50 கிலோ மீட்டர்‌ வேகத்தில்‌ வீசக்கூடும்‌.

30.06.2022. 01.07.2022: இலட்சத்‌தீவு பகுதி, கேரளா மற்றும்‌ அதனை ஓட்டிய தென்கிழக்கு அரபிக்கடல்‌, கர்நாடகா மற்றும்‌ அதனை ஓட்டிய மத்திய கிழக்கு அரபிக்கடல்‌ பகுதிகளில்‌ சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல்‌ 50 கிலோ மீட்டர்‌ வேகத்தில்‌
வீசக்கூடும்‌.

மேற்குறிப்பிட்ட நாட்களில்‌ மீனவர்கள்‌ இப்பகுதஇுகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்‌ என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

TN CM Vijay: ஜோசப் விஜய் எனும் நான்..! நாளை காலை 10 மணிக்கு முதல்வராக பதவியேற்கிறார் விஜய்..
Tamil Nadu Weather Update: தமிழகத்தில் ஒரு வாரம் வெளுக்கப்போகும் கனமழை.. சென்னையிலும் வெயிலுக்கு ரெஸ்ட்!