முன்னாள் அமைச்சரின் முறைகேடுகளுக்கு உடந்தையாக இருந்ததாகக் கருதப்படும் ஐஏஎஸ் அதிகாரிகள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க திமுக அரசுக்கு தயக்கம் காட்டுவது ஏன்? என மக்கள் நீதி மய்யம் கேள்வி எழுப்பியுள்ளது.
அதிமுக ஆட்சியில் முறைகேடு
அதிமுக ஆட்சிகாலத்தில் சென்னை மற்றும் கோவை மாநகராட்சிகளில் பல்வேறு பணிகளுக்கு டெண்டர் கோரியதில் முறைகேடுகள் நடந்ததாக அறப்போர் இயக்கம் மற்றும் திமுக புகார் தெரிவித்திருந்தது. இது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டது. மாநகராட்சி பணிகளுக்கான டெண்டர் ஒதுக்கீட்டில் அரசுக்கு ரூ.811 கோடி இழப்பு ஏற்பட்டதாக கூறப்பட்டது. மேலும் டெண்டரில் முறைகேடு செய்ததாக அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் சோதனை நடத்தினர். இரண்டு முறை நடைபெற்ற சோதனையில் பல்வேறு முக்கிய ஆவணங்களை போலீசார் கைப்பற்றினர். இதனையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசார் எஸ்.பி.வேலுமணி மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்தநிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க கோரி எஸ்.பி. வேலுமணி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். ஆனால் வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது. வழக்கை ரத்து செய்ய கோரும் வேலுமணி மனு குறித்து தமிழக அரசு, லஞ்ச ஒழிப்புத் துறை, அறப்போர் இயக்கம், திமுக உள்ளிட்டோர் பதிலளிக்கவும் உத்தரவிட்டுள்ளது. இந்தநிலையில் முறைகேடு புகார் தொடர்பாக மக்கள் நீதி மய்யம் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்,
எஸ்.பி.வேலுமணிக்கு அதிர்ச்சி கொடுத்த சென்னை உயர்நீதிமன்றம்..!
undefined
ஐஏஎஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க தயக்கம் ஏன்?
சென்னை, கோவை மாநகராட்சிகளில் பல்வேறு பணிகளுக்கு டெண்டர் விட்டதில் அரசுக்கு ரூ.811 கோடி இழப்பு ஏற்பட்டதாக தொடரப்பட்ட முறைகேடு வழக்கில், முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கும், 4 ஐஏஎஸ் அதிகாரிகள் உட்பட 12 அதிகாரிகளுக்கும் தொடர்பு உள்ளதற்கான ஆதாரங்கள் லஞ்ச ஒழிப்புத் துறையிடம் சிக்கியுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்ய அனுமதிகோரி,7 மாதங்களுக்கு முன்பு தமிழக அரசுக்கு லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் கடிதம் எழுதியும், இதுவரை ஒப்புதல் வழங்காதது பெருத்த சந்தேகங்களை ஏற்படுத்தி உள்ளது. முறைகேட்டுக்கு உடந்தையாக இருந்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கத் தயங்குவது ஏன்? உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது வழக்குப் பதிவு செய்து, இனியும் இதுபோன்ற முறைகேடுகளுக்கு எந்த அதிகாரியும் துணைபோகாத அளவுக்கு கடும் நடவடிக்கை எடுப்பது அவசியம் என மக்கள் நீதி மய்யம் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படியுங்கள்
ஓபிஎஸ் துரோகத்தின் அடையாளம்..! திமுகவை புகழ்வது கட்சிக்கு செய்யும் துரோகம்..! ஜெயக்குமார் காட்டம்