உஷார்..! உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.. இந்தெந்த மாவட்டங்களில் கனமழை..! வானிலை மையம் தகவல்..

Published : Apr 03, 2022, 03:22 PM IST
உஷார்..! உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.. இந்தெந்த மாவட்டங்களில் கனமழை..! வானிலை மையம் தகவல்..

சுருக்கம்

ஏப்ரல் 7 ஆம் தேதி வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  

இதுக்குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேல் அடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக, 

03.04.2022: தென் தமிழகம் , மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டியுள்ள மாவட்டங்கள் டெல்சா மாவட்டங்கள், புதுக்கோட்டை மாவட்டம் மற்றும் காரைக்கால் பகுதிகளில்  ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் . தென் தமிழகம் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கன மழை பெய்யக்கூடும். 

04.04.2022, 05.04.2022: தென் தமிழகம், மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள், புதுக்கோட்டை, சிவகங்கை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

06.04.2022, 07.04.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னையை பொறுத்தவரை:

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேக மூட்டத்துடன் காணப்படும்.அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸ் வரை மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும். 

இதனிடையே ஏப்ரல் 6 ஆம் தேதி தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள வங்க கடல் பகுதிகளில் ஓர் மேலடுக்கு சுழற்சி உருவாகக்கூடும். அதற்கடுத்த 24 மணி நேரத்தில் தென் கிழக்கு வங்க கடல் பகுதிகளில் ஓர் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் மீனவர்களுக்கான எச்சரிக்கை:

06.04.2022:  தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 கிலோ மீட்டர் முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே மணிக்கு 60 கிமீ வேகத்திலும் வீசக்கூடும். 

07.04.2022: தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனையொட்டிய அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு  45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே மணிக்கு 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 
 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

TVK VIJAY: விஜய்க்கு முதலமைச்சர் பாதுகாப்பு வாபஸ்.! ஆளுநரின் உத்தரவால் மாறிய அரசியல் களம்!
ஆர்.பி. சவுத்ரி உடலை பார்த்து தேம்பி அழுத விஜய்... ஜீவாவுக்கு ஆறுதல் சொன்ன தளபதி