வதந்தியை நம்பாதீங்க.. கண்டிப்பா முழு ஆண்டு தேர்வு நடக்கும்.! பள்ளிக்கல்வித்துறை உறுதி !!

Published : Apr 03, 2022, 12:57 PM IST
வதந்தியை நம்பாதீங்க.. கண்டிப்பா முழு ஆண்டு தேர்வு நடக்கும்.! பள்ளிக்கல்வித்துறை உறுதி !!

சுருக்கம்

ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை முழு ஆண்டுத் தேர்வுகள் நடைபெறாது என வெளியான தகவல் தவறானது எனவும், தேர்வுகள் நிச்சயம் நடைபெறும் எனவும் பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் தெரிவித்துள்ளார்.

பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு :

தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் குறைந்த பிறகு கடந்த 2021 செப்டம்பர் மாதம் 1ம் தேதி முதல் வெகு நாட்களுக்கு பிறகு மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெற்று வந்தது. 10,11,12ம் வகுப்பு மாணவர்களுக்கு திருப்புதல் தேர்வு நடத்தப்பட்டு. அரையாண்டு விடுமுறையும் அளிக்கப்பட்டது. 

இந்த நேரத்தில் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து உருமாற்றம் அடைந்த ஓமிக்ரான் வைரஸ் வேகமெடுக்க தொடங்கியது. அதனால் மாணவர்களின் நலன் கருதி ஜனவரி 31ம் தேதி வரை மீண்டும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. நடப்பு கல்வியாண்டில் பொதுத்தேர்வுகளை நடத்த திட்டமிடப்பட்டு தேர்வு கால அட்டவணையும் வெளியிடப்பட்டது. 

தவறான தகவல் :

அதில் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மே மாதம் 6 ஆம் தேதி முதல் பொதுத்தேர்வு தொடங்கும் என்றும் 30 ஆம் தேதி வரை தொடர்ந்து தேர்வு நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒன்று முதல் ஐந்தாம் வகுப்புக்கு முழு ஆண்டுத் தேர்வு கிடையாது என தகவல் வெளியாகின.

இந்நிலையில், தமிழகத்தில் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை ஆண்டு இறுதி தேர்வு நடைபெறாது என வெளியான செய்தி தவறானது என பள்ளிக்கல்வித்துறை தற்போது அறிவித்துள்ளது. அதனால் 1-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை  பொதுத்தேர்வு நடைபெறும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

முக்தாரை உடனடியா கைது செய்யுங்க.. தமிழகத்தில் போராட்டம் வெடிக்கும்.. அரசுக்கு சரத்குமார் எச்சரிக்கை
எடப்பாடிக்கு வேட்டு வைத்த செங்ஸ்..! விஜய் தான் முதலமைச்சர் என சபதம்