Ramadan 2022 : தமிழகத்தில் இன்று ரமலான் நோன்பு தொடங்கியது..!! கொரோனாவுக்கு பிறகு கோலாகல தொடக்கம்..!

By Raghupati R  |  First Published Apr 3, 2022, 5:41 AM IST

ஆண்டுதோறும் ரமலான் பிறை தொடங்கிய நாளில் இருந்து நோன்பு கடைப் பிடிக்கப்படும். ரமலான் மாத இறுதியில் பண்டிகை கொண்டாடப்படும்.


ரமலான் நோன்பு தொடக்கம் :

முஸ்லிம்களின் ஐம்பெரும் கடமைகளில் ஒன்று புனித ரமலான் மாதத்தில் நோன்பு நோற்பதாகும். இந்த மாதம் முழுவதும் நோன்பை கடை பிடிப்பார்கள். இஸ்லாமிய காலண்டரில் 9-வது மாதம் ரமலான் ஆகும். இந்த புனித மாதத்தில் தான் மக்களுக்கு நேர்வழி காட்டக்கூடிய திருக்குர்ஆன் அருளப்பட்டது.

Tap to resize

Latest Videos

undefined

ஆண்டுதோறும் ரமலான் பிறை தொடங்கிய நாளில் இருந்து நோன்பு கடைப் பிடிக்கப்படும். ரமலான் மாத இறுதியில் பண்டிகை கொண்டாடப்படும். இந்த ஆண்டுக்கான ரமலான் நோன்பு இன்று தொடங்கியது. வளைகுடா நாடுகளில் ரமலான் நோன்பு நேற்று  தொடங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.

நோன்பு என்பது கிழக்கு வெளுத்ததில் இருந்து சூரியன் மறையும் வரை உண்ணுதல், பருகுதல் உள்பட நோன்பை முடிக்கும் காரியங்களை விட்டு ஒருவர் தன்னை தடுத்து கொள்வதாகும். அதாவது அதிகாலை 4 மணி அளவில் இருந்து மாலை 6.30 மணி வரை உண்ணாமலும், பருகாமலும் இருப்பார்கள். புனித ரமலான் மாதத்தையொட்டி இரவில் சிறப்பு தொழுகையில் ஈடுபடுவார்கள். இந்த மாதம் முழுவதும் சிறப்பு தொழுகையில் ஈடுபடுவார் கள்.

இந்த புனித மாதத்தில் முஸ்லிம்கள் தர்மம் எனும் ஜகாத்தில் ஈடுபடுவார்கள். மேலும் திருக்குர் ஆன் ஓதுதல், பிரார்த்தனை செய்தல் உள்ளிட்ட பல்வேறு வழிபாடுகளில் ஈடுபடுவார்கள். 29 அல்லது 30 நாட்கள் நோன்பு முடிவில் ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படும்.

கொரோனா காரணமாக கடந்த ஆண்டுகள் சிறப்பு தொழுகைக்கு அனுமதியளிக்கப்படாத நிலையில் , இந்த ஆண்டு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதால் தமிழகம் முழுவதும் பள்ளி வாசல்கள் அலங்கரிப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது ஆகும்.

click me!