அம்பலமான மாமியாரின் கள்ளக்காதல்.. வளைகாப்பு நடைபெற இருந்த 9 மாத கர்ப்பிணி மருமகளுக்கு நேர்ந்த கொடுமை..!

Published : Apr 02, 2022, 09:02 PM IST
அம்பலமான மாமியாரின் கள்ளக்காதல்.. வளைகாப்பு நடைபெற இருந்த 9 மாத கர்ப்பிணி மருமகளுக்கு நேர்ந்த கொடுமை..!

சுருக்கம்

சோனியாவின் மாமியார் பொன்னம்மாவுக்கும் சோனியாவின் அத்தையின் கணவர் பவானி ஆகிய இருவருக்கும் கள்ளத்தொடர்பு இருந்துள்ளது.

அரூர் அருகே வளைகாப்பு நடைபெற உள்ள நிலையில் ஒன்பது மாத நிறைமாத கர்ப்பிணி மர்மமான முறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம்  அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

 மாமியார் கள்ளக்காதல்

தருமபுரி மாவட்டம் அரூர் அருகேயுள்ள அச்சல்வாடி அடுத்த ஒடசல்பட்டி கிராமத்தைச் சார்ந்த ஜெயகுமார் (எ)பிரதீப் என்பவருடைய மனைவி சோனியா (20). இவர்களுக்கு கடந்த 11 மாதத்திற்கு முன்பு இருவரும் திருமணம் செய்துக்கொண்டனர். இந்நிலையில் பிரதீப் கோவையில் கூலி வேலை செய்து வருகிறார். மனைவி சோனியா 9 மாத நிறைமாத  கர்ப்பிணியாக இருந்துள்ளார். சோனியாவின் மாமியார் பொன்னம்மாவுக்கும் சோனியாவின் அத்தையின் கணவர் பவானி ஆகிய இருவருக்கும் கள்ளத்தொடர்பு இருந்துள்ளது.

9 மாத கர்ப்பிணி தற்கொலை

இதைக்கண்ட சோனியா அவருடைய அத்தை முத்தழகியிடம் தெரிவித்துள்ளார். இதனை அறிந்த பவானியும் பொன்னம்மாவும் சோனியாவை பழிவாங்கும் எண்ணத்தில் இருந்ததாக கூறப்படுகிறது.  சோனியாவிற்கு வளைகாப்பு நடைபெற உள்ள நிலையில் நேற்று இரவு மர்மமான முறையில் இவருடைய வீட்டில் தூக்கிலிட்டபடி  இறந்து கிடந்துள்ளார். இதுதொடர்பாக அரூர் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த சோனியா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

உறவினர்கள் சாலை மறியல்

மேலும், சோனியா சாவில் சந்தேகம் இருப்பதாக கூறி அவரது உயிரிழப்பிற்கு காரணமான கணவர் குடும்பத்தினர் மீது வழக்குப்பதிந்து அவர்களை கைது செய்யக்கோரி உறவினர்கள் 100க்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனையடுத்து, போலீசார் பேச்சு வார்த்தை நடத்தியதை கலைந்து சென்றனர். பிரேத பரிசோதனைக்கு பிறகே உயிரிழப்புக்கான காரணம் தெரியவரும். வளைகாப்பு நடைபெற உள்ள ஒன்பது மாத நிறைமாத கர்ப்பிணி பெண் மர்மமான முறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 

PREV
click me!

Recommended Stories

பாம்பை கழுத்தில் போட்டு கொண்டு டாஸ்மாக் கடைக்கு வந்த இளைஞர்! அலறி ஓடிய குடிமகன்கள்!
தர்மபுரி மாவட்ட அங்கன்வாடி மையங்களில் வேலைவாய்ப்பு: 135 காலிப்பணியிடங்கள்! முழு விவரங்களுக்கு…