நம்ப வைத்து கழுத்தறுத்துடாங்க.. கூட்டணி கட்சியான விடுதலை சிறுத்தைகள் வேட்பாளரை வீழ்த்திய திமுக..!

By vinoth kumarFirst Published Mar 4, 2022, 12:07 PM IST
Highlights

திமுக தனது கூட்டணிக் கட்சிகளுக்கு உரிய இடங்கள் குறித்த அறிவிப்புகள் நேற்று வெளியிடப்பட்டது. அந்த வகையில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு ஒரு மாநகராட்சி துணை மேயர், 2 நகராட்சி தலைவர், 3  நகராட்சி துணைத்தலைவர், 3 பேரூராட்சி தலைவர், பேரூராட்சி துணை தலைவர் பதவிகள் ஒதுக்கப்பட்டுள்ளன என  திமுக தலைமை கழகம் வெளியிட்டுள்ளது. இதற்கான மறைமுக தேர்தல் இன்று நடைபெற்றது. 

பொ.மல்லாபுரம் பேரூராட்சி தலைவர் தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் வேட்பாளரை வீழ்த்தி திமுக வேட்பாளர் வெற்றி பெற்ற சம்பவத்தால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

தமிழகத்தில் 21 மாநகராட்சிகள்,  138 நகராட்சிகள்,  489 பேர் கட்சிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் கடந்த 19ம் தேதி நடைபெற்றது. இத்தேர்தலில் 21 மாநகராட்சிகள்,  132 நகராட்சிகள் , 435 பேரூராட்சிகளில் திமுக கூட்டணி கைப்பற்றி அமோக வெற்றி பெற்றது.  நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற மாமன்ற உறுப்பினர்கள் பதவியேற்றுக் கொண்டனர்.  

இந்நிலையில், திமுக தனது கூட்டணிக் கட்சிகளுக்கு உரிய இடங்கள் குறித்த அறிவிப்புகள் நேற்று வெளியிடப்பட்டது. அந்த வகையில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு ஒரு மாநகராட்சி துணை மேயர், 2 நகராட்சி தலைவர், 3  நகராட்சி துணைத்தலைவர், 3 பேரூராட்சி தலைவர், பேரூராட்சி துணை தலைவர் பதவிகள் ஒதுக்கப்பட்டுள்ளன என  திமுக தலைமை கழகம் வெளியிட்டுள்ளது. இதற்கான மறைமுக தேர்தல் இன்று நடைபெற்றது. 

இந்நிலையில், தருமபுரி மாவட்டம் பொ.மல்லாபுரம் பேரூராட்சி தலைவர் பதவி விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு ஒதுக்கப்பட்டது. இந்த பேரூராட்சியை கூட்டணி கட்சிக்கு ஒதுக்கியதால் திமுகவினர் அதிர்ச்சியடைந்து திமுகவை சார்ந்த வேட்பாளரை களமிறக்கினர். இந்நிலையில், பொ.மல்லாபுரம் பேரூராட்சி தலைவர் தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் வேட்பாளரை வீழ்த்தி திமுக வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளார். விடுதலை சிறுத்தைகள் வேட்பாளரை வீழ்த்தி திமுகவின் சாந்தி புஷ்பராஜ் வெற்றி பெற்றதால் விசிகவினர் சாலை மறியலில் ஈடுபட்டு வரும் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

click me!