Tamilnadu Rains : தமிழகத்தில் மீண்டும் மழை.. வெளுத்து வாங்க போகுது.. எந்தெந்த மாவட்டங்கள் தெரியுமா ?

Published : Feb 07, 2022, 01:01 PM IST
Tamilnadu Rains : தமிழகத்தில் மீண்டும் மழை.. வெளுத்து வாங்க போகுது.. எந்தெந்த மாவட்டங்கள் தெரியுமா ?

சுருக்கம்

தமிழகத்தின் உள் மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் சென்னை வானிலை மையம் புது தகவலை வெளியிட்டு இருக்கிறது.

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘இன்று முதல் 9ஆம் தேதி வரை தமிழகம் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும். 

வருகிற 10ஆம் தேதி தென் தமிழக கடலோர மாவட்டங்கள், புதுக்கோட்டை ,தஞ்சாவூர் ,திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.

வருகிற 10-ஆம் தேதி தென் தமிழக மாவட்டங்கள், வட தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை , காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும். சென்னையை பொருத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். 

காலை வேளையில் சில பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 32, குறைந்தபட்ச வெப்பநிலை 22 டிகிரி செல்சியஸை  ஒட்டியிருக்கும். மீனவர்களுக்கான எந்தவித எச்சரிக்கையும் சென்னை வானிலை ஆய்வு மையத்தால் விடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Tamilnadu 12th Result: 12ம் வகுப்பு முடிவுகள் வெளியாகுவதில் சிக்கல்.. என்ன காரணம்? லேட்டஸ்ட் ரிப்போர்ட்!
ஆளுநரைச் சந்தித்தார் விஜய்: தமிழகத்தில் ஆட்சி அமைக்க உரிமை கோரல்!