குறையும் கொரோனா.. இரண்டாவது நாளாக குறைந்து பதிவு.. லாக்டவுன் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுமா..?

By Thanalakshmi VFirst Published Jan 17, 2022, 8:35 PM IST
Highlights

தமிழ்நாட்டில் கிட்டத்தட்ட 20 நாட்களுக்கு பிறகு தினசரி கொரோனா பாதிப்பு குறைய தொடங்கி உள்ளன. நேற்றும் இன்றும் தமிழ்நாட்டில் கொரோனா தொற்று விகிதம் இறங்கு முகமாக பதிவாகியுள்ளது.
 

தமிழ்நாட்டில் கிட்டத்தட்ட 20 நாட்களுக்கு பிறகு தினசரி கொரோனா பாதிப்பு குறைய தொடங்கி உள்ளன. நேற்றும் இன்றும் தமிழ்நாட்டில் கொரோனா தொற்று விகிதம் இறங்கு முகமாக பதிவாகியுள்ளது. ஆம் நேற்று தமிழ்நாட்டில் 23,975 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இது முந்தைய நாளை விட குறைவு. நேற்று முந்தினம் பாதிப்பு 23,989 ஆக இருந்த நிலையில் நேற்றூ கொரோனா உறுதியானவர்களின் எண்ணிக்கை 14 குறைந்து 23,975 ஆக பதிவானது. அதே போல் இன்று ஒரே நாளில் 23,443 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கையானது நேற்றைய பாதிப்பு 23,975 யிலிருந்து 532 குறைந்துள்ளது. 

தமிழ்நாட்டில் 20 நாட்களுக்கு பிறகு நேற்று முதல்முறையாக கொரோமா பாதிப்பு குறைவாக பதிவாகி உள்ளது. கொஞ்சம்தான் குறைந்துள்ளது என்றாலும் இது ஒரு வகையில் நல்ல செய்தியாக பார்க்கப்படுகிறது. சென்னையில் 8987 பேருக்கு நேற்று பாதிப்பு ஏற்பட்டது. இந்நிலையில் இன்று 396 ஆக குறைந்து புதிதாக 8591 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இன்று ஒரே நாளில் சென்னைக்கு அடுத்தபடியாக செங்கல்பட்டில் 2236 பேருக்கும், கோவையில் 2042 பேருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. கொரோனா பாதிப்புகள் மாவட்ட அளவில் ஆங்காங்கே உயர்ந்தாலும் மொத்தமாக கொரோனா பாதிப்பு இரண்டாவது நாளாக குறைந்து பதிவாகி இருக்கிறது. தமிழ்நாட்டில் கொரோனா தொற்று பாதித்து சிகிச்சையில் இருப்போர்களின் எண்ணிக்கை  தற்போது 1.52 லட்சமாக உள்ளது. 

ஆனால் மருத்துவமனையில் குறைந்த அளவிலே சிகிச்சையில் இருக்கின்றனர். பெரும்பாலும் தொற்று பாதிக்கப்பட்டவர்கள் வீடுகளிலும், கொரோனா முகாம்களிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர். சென்னையில் மட்டும் 35 சதவிகித ஆக்சிஜன் இல்லாத படுக்கைகள் மட்டுமே இதுவரை நிரம்பி உள்ளதாக கூறப்படுகிறது. மற்ற கொரோனா படுக்கைகள் இதுவரை நிரம்பவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. எனவே கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் குறிப்பிடத்தகுந்த அளவிற்கு பதிவானாலும் மக்கள் மருத்துவமனைக்கு வருவது குறைந்துள்ளது. இது ஒருவகையில் நல்ல செய்தியாக பார்க்கப்படுகிறது.

இதனால் தமிழ்நாட்டில் விரைவில் லாக்டவுன் கட்டுப்பாடுகளில் தளர்வுகள் வருமா என்ற கேள்வி எழுந்துள்ளது. நேற்று ஏற்பட்டது போல இன்னும் ஒரு வாரம் கொரோனா தொற்று விகிதம் குறையும் பட்சத்தில் தமிழ்நாட்டில் தளர்வுகள் கொண்டு வரப்பட வாய்ப்புகள் உள்ளன என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக இரவு நேர ஊரடங்கு, முழு ஊரடங்கு போன்ற கட்டுபாடுகளை தளர்த்த வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.

click me!