“இன்றுடன் நிறைவடைகிறது தேர்தல் பிரச்சாரம்” – சூடு பிடிக்கும் வாக்கு சேகரிப்பு

 
Published : Nov 17, 2016, 11:01 PM ISTUpdated : Sep 19, 2018, 01:48 AM IST
 “இன்றுடன் நிறைவடைகிறது தேர்தல் பிரச்சாரம்” – சூடு பிடிக்கும் வாக்கு சேகரிப்பு

சுருக்கம்

தமிழகத்தில் தஞ்சை, திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி ஆகிய தொகுதிகளிலும் புதுச்சேரியில் நெல்லித்தோப்பு தொகுதியிலும் இன்று மாலையுடன் பரப்புரை ஓய்கிறது. இதற்கிடையில் இத்தொகுதிகளில் கட்சிகளுக்கான விதிமுறைகளையும் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

தஞ்சை, அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், புதுச்சேரி நெல்லித்தோப்பு ஆகிய தொகுதிகளில் வருகின்ற 19-ஆம் தேதி இடைதேர்தல் நடைபெற உள்ளது.

இதற்காக இந்த தேர்தலில் போட்டியிடும் அனைத்து கட்சி வேட்பாளர்களும்  தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டவுடன் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், 4 தொகுதிகளிலும் தேர்தல் பிரச்சாரம் இன்று மாலை 5 மணியுடன் நிறைவடைகிறது. இதனால் அரசியல் கட்சிகள் தீவிர ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

தொலைக்காட்சி, வானொலி வாட்ஸ் அப், ஃபேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக வலைத் தளங்களில் பரப்புரை மேற்கொள்ளவும் கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தேர்தலுக்கான வாக்குப்பதிவு நவம்பர் 19ம் தேதி காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளது. தொடர்ந்து நவம்பர் 22 ம் தேதி ஓட்டுகள் எண்ணப்பட்டு, அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. 

PREV
click me!

Recommended Stories

நம்பிக்கை வாக்கெடுப்பில் முதுகில் குத்திய திமுகவினர்..! முக்கிய விக்கட்டை தூக்கிய எடப்பாடி..! ஸ்டாலின் அதிர்ச்சி
புதிய பொறுப்பாளர்கள் நியமித்து அதிரடி.. தமிழ்நாடு அரசியலில் பாஜக அதிரடி மூவ்!