மத்திய வங்கக்‍கடலில் காற்றழுத்தத் தாழ்வு நிலை : 24 மணி நேரத்தில் மழை பெய்ய வாய்ப்பு!

 
Published : Nov 17, 2016, 09:58 PM ISTUpdated : Sep 19, 2018, 01:47 AM IST
மத்திய வங்கக்‍கடலில் காற்றழுத்தத் தாழ்வு நிலை : 24 மணி நேரத்தில் மழை பெய்ய வாய்ப்பு!

சுருக்கம்

மத்திய வங்கக்‍கடலில் காற்றழுத்தத் தாழ்வு நிலை நீடிப்பதால், தமிழகம் மற்றும் புதுச்சேரியில், ஓரிரு இடங்களில் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

மத்திய வங்கக்‍கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்தத் தாழ்வு நிலை காரணமாக, தமிழகத்தில் ஒருசில இடங்களில் மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் கே.வி.கே. காட்டுக்‍ குப்பத்தில் 5 செ.மீட்டர் மழை பதிவாகியுள்ளது. பாம்பன், தேவக்‍கோட்டை, ஆயக்‍குடி, ஆகிய இடங்களில் தலா 3 செ.மீட்டர் மழை பதிவாகியுள்ளது.

அடுத்த 24 மணி நேரத்திற்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் மழை பெய்யும் என்றும், சென்னையில் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யும் என்றும், சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனிடையே, தென்மேற்கு வங்கக்‍கடலில் இலங்கையொட்டிய பகுதியில் புதிதாக காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி இரண்டொரு நாளில் உருவாக வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

PREV
click me!

Recommended Stories

நம்பிக்கை வாக்கெடுப்பில் முதுகில் குத்திய திமுகவினர்..! முக்கிய விக்கட்டை தூக்கிய எடப்பாடி..! ஸ்டாலின் அதிர்ச்சி
புதிய பொறுப்பாளர்கள் நியமித்து அதிரடி.. தமிழ்நாடு அரசியலில் பாஜக அதிரடி மூவ்!