TNPSC : போட்டித்தேர்வர்கள் கவனத்திற்கு.. 'டிஎன்பிஎஸ்சி' வெளியிட்ட முக்கிய அறிவிப்பு.. என்ன தெரியுமா..?

Published : Feb 02, 2022, 05:34 AM IST
TNPSC : போட்டித்தேர்வர்கள் கவனத்திற்கு.. 'டிஎன்பிஎஸ்சி' வெளியிட்ட முக்கிய அறிவிப்பு.. என்ன தெரியுமா..?

சுருக்கம்

டிஎன்பிஎஸ்சி  புதிய அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டு இருக்கிறது.

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய (டி.என்.பி.எஸ்.சி) செயலாளர் உமாமகேஸ்வரி செய்திக்குறிப்பு ஒன்றினை வெளியிட்டு இருக்கிறார். அதில், ‘டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 பணிக்கான 3-ம் கட்ட சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு சென்னை பிராட்வே பஸ் நிலையம் அருகே உள்ள டி.என்.பி.எஸ்.சி. அலுவலகத்தில் வருகிற 15-ந் தேதி நடைபெறுகிறது.

சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வுக்கு அழைக்கப்படும் விண்ணப்பதாரர்களின் மதிப்பெண்கள், ஒட்டுமொத்த தர வரிசை எண், இட ஒதுக்கீட்டு விதி மற்றும் காலிப்பணியிடங்களின் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட தற்காலிக பட்டியல் தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வுக்கான தேதி, நேரம் மற்றும் விவரங்கள் அடங்கிய அழைப்பு கடிதத்தினை www.tnpsc.gov.in என்ற தேர்வாணைய இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.விண்ணப்பதாரர்களுக்கு கலந்தாய்வு அழைப்பாணை தனியாக தபால் மூலம் அனுப்பப்பட மாட்டாது’ என்று கூறப்பட்டுள்ளது.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

போலீஸ் கையைப் பிடித்து கடித்துக் குதறிய தவெக தொண்டர்.. வைரலாகும் விஜய் ரசிகரின் வெறித்தனம்!
அரசு பள்ளி மாணவர்களுக்கு தரமற்ற இலவச சைக்கிள்.. அண்ணாமலையின் பகீர் குற்றச்சாட்டு!